பக்கம்:அறிவியல் அகராதி.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spa

404

spa


space firsts - வானவெளி முதல் நிகழ்ச்சிகள்: அமெரிக்கா உருசியா 1. 1957 அக். 4, உருசியா முதல் புட்னிக் ஏவப்பட்டது. 2. 1957 நவ, 3, புட்னிக் 2இல் முதல் வானவெளி விலங்கு இலய்க்கா அனுப்பப்பட்டது. 3. 1959 ஜூன் 2, திங்கள் நிலாவான உலூனிக்1 உருசியாவால் வெற்றி தரும் வகையில் ஏவப்பட்டது. 4. 1961 ஏப். 12, உருசியா முதன் முதலில் ககாரினை வான வெளிக்கு வாஸ்தோக் கப்பலில் அனுப்பியது. 5. 1963 ஜூன் 16, உருசியா முதல் வீராங்கனை வேலண்டினா தெரஷோவா வாஸ்தோக் 6இல் அனுப்பப்பட்டார். 6. 1965 ஜூன் 3, ஜெமினி 4இல் சென்ற அமெரிக்க எட்வர்டு ஒயிட் கப்பலை விட்டு வெளியேறி முதன்முதலில் வான வெளியில் நடந்தார். 7. 1969 ஜூலை 16, திங்களில் முதன் முதலில் நெயில் ஆம்ஸ்டாங் ஜூலை 21இல் காலடி எடுத்து வைத்தார். 8. 1987 டிச3, உருசியா வான வெளிவீரர் யூரி ரோமனென்கோ 360 நாள் வானவெளிச் சூழ்நிலைத் தாங்காற்றல் பதிவுக் குறிப்பை முறியடித்தார். இக்குறிப்பு உருசிய வானவெளி வீரராலேயே ஏற்படுத்தப்பட்டது. ஆக, 1957 முதல் 1987 வரை 31 ஆண்டுகளில் வான வெளி வரலாற்றில் நடைபெற்ற அருஞ் செயல்கள். இவை. இந்தியா: 1. 1975 ஏப். 19, இந்தியா முதல் செயற்கை நிலா ஆரிய பட்ட உருசியாவிலிருந்து ஏவப்பட்டது. 2. 1981 ஜன 19, இல் இந்திய முதல் செய்தித் தொடர்பு நிலா ஆப்பிள் பிரான்சிலிருந்து விடப்பட்டது. 3. 1981 ஜூலை 24, ரோகினி இந்தியாவிலிருந்து முதன்முதலில் ஏவப்பட்டது. 4. 1984 ஏப்ரல் 3, ரகேஷ் சர்மா முதல் இந்திய வானவெளி வீரரானார். இரு உருசிய வான வெளி வீரர்களுடன் சோயஸ் டி IIஇல் சென்றார். ஆக, 1975 முதல் 2000 வரை 25 ஆண்டுகளில் இந்தியாவின் வானவெளி அருஞ் செயல்கள் இவை. பா. Indian space efforts (ப.து)

space history - வானவெளி வரலாறு: 1957லிருந்து 2000 வரை 43 ஆண்டுகள் செயல்நிலை வரலாறு உண்டு. இக்கால கட்டத்தில் பல அரிய செயல்கள் நடந்துள்ளன. பா. space firsts, (ப.து)

space funeral - வானவெளி இறுதிச்சடங்கு: வானவெளி அருமுயற்சிகள் மற்றும் பிற துறை முயற்சிகள் தொடர்பாக உயிர்நீத்த 24 பேர்களுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு, அவர்கள் பினச்சாம்பலை அலுமினியக் குப்பிகளில் வைத்து ஏவுகணை மூலம் அமெரிக்கா புவியை வலம் வரச் செய்தது. இது இரண்டு ஆண்டுகள் வலம் வந்தது. சுற்றுகாலம் 90 நிமி. இந்த ஏவுகணை 22.4.97 அன்று ஏவப்பட்டது. 24 பேர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். டிமோதி