பக்கம்:அறிவியல் அகராதி.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spa

405

spa


லியரி, பபத்த வானவெளி அறிவு மிக்கவர் ஒ நெயில் வானவெளி இயற்பியலார், ஜெனி ராடன் பெரி, ஸ்டர் டிரக் தொலைக்காட்சித் தொடரை உருவாக்கியவர். டிமோதி 1996 மே திங்கள் இறந்தார். (வா.அ)

space man - வானவெளி மனிதன்: வேறுபெயர்கள், வானவெளி வீரர் வானவெளிப்பயணி, இவர்களில் மகளிரும் அடங்குவர். இவர்கள் ஒரிருவரைத் தவிர ஏனையோர் வானவெளிக்குச் சென்று திரும்பியவர்கள். காட்டாக ககாரின் முதல் வானவெளி வீரராக இருந்தாலும் பிறிதொரு சமயம் கடைசியாகக் கப்பலிலிருந்து தரையில் இறங்கும்பொழுது அவர் இறக்க நேர்ந்தது. (ப.து)

space Odyssey - வானவெளி நெடும்பயணம்: 2001 என்னும் முயற்சி. 1994இல் தொடங்கப்பட்டது. 20.3.97 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்குக் காரணமானவர் வான வெளி ஆசான் எனப்படும் ஆர்தர் கிளார்க் (வா.அ)

space platform - வானவெளி மேடை: வேறுபெயர் வாணவெளி நிலையம். ஓர் உற்றுநோக்கும் ஆய்வுக்கூடம். புவியை வலம் வருவது, எ-டு உருசிய உலூனிக் (ப.து)

space powers - வானவெளி வல்லரசுகள்: இவை அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நான்கு நாடுகள் ஆகும்.

space probe - வானவெளி துருவி: வானவெளி நிலைமைகளையும் திகழ்ச்சிகளையும் ஆராயும் நிலா, எ-டு அமெரிக்கப் பயணியர், உருசிய உலூனிக் (ப.து)

space problems - வானவெளிச் சிக்கல்கள்: இன்றியமையாதவை பின்வருமாறு. 1. எரிபொருள் எடை, 2. எரிபொருள் விரைவு, 3. ஈர்ப்பும் விரைவும், 4. கலத்தைக் கட்டுதல், 5. ஏவுதலும் இலக்கை அடைதலும், 6. திருத்தப்பாடும் திருத்தக்கேடும், 7. வழிப்படுத்தலும் செலவும், 8. வழியறிதலும் உற்றுநோக்கலும், 9. கலத்தைச் செலுத்துதல், 10. நுட்ப ஏற்பாடுகள், 11. உணவு, 12. எடை, 13. எடைமிகுதி, 14. எடையின்மை, 15. விண்கொள்ளி, 16. கதிர்வீச்சுகள், 17. வானவெளி நோய்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டு 2400க்கு மேற்பட்ட நிலாக்கள் வெற்றிதரும் வகையில் ஏவப்பட்டுள்ளன. (ப.து)

space programme merger - வானவெளி திட்ட ஒருங்கிணைப்பு: 1993இல் நவம்பரில் அமெரிக்காவும் உருசியாவும் தங்கள் வானவெளித் திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்தன. 1997க்குள் புவியை வலம் வரும் அனைத்துலக வானவெளி நிலையத்தை அமைப்பது இவ்விரு நாடுகளின் முதல் திட்டமாகும். இதற்கு 12 வானவெளி ஒடங்களும் 12 உருசிய உயர்த்