பக்கம்:அறிவியல் அகராதி.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sph

410

spi


செய்யலாம். வாய்பாடு r = (l2 +x2 ) /2 (r-ஆரம், l-நீளம், x- உயரம்). (இய)

sphincter -சுருக்குதசை: பா. muscle. (இயி)

spider-சிலந்தி: பூச்சிவகை (உயி)

spike-கதிர்: நெடும் பூக்கொத்தின் ஒருவகை. இதில் காம்பிலாப் பூக்கள் கீழிருந்து மேல் அமைந்திருக்கும் : நாயுருவி. (உயி)

spinal canal - தண்டுவட வழி: முதுகெலும்பில் முள்ளெலும்புகள் வழியாகத் தண்டுவடம் செல்லுவதற்குரிய வழி. (உயி)

spinal column - முதுகெலும்பு. பா. backbone. (உயி)

spinal cord - தண்டுவடம்: முதுகெலும்பில் செல்லும் நாண், முதுகெலும்புகளின் முக்கிய நரம்பச்சு. (உயி)

spinal nerves -தண்டுவட நரம்புகள்: நரம்புகளில் ஒருவகை (உயி)

spindle - கதிர்: கண்ணறைப் பிரிவில் உண்டாகும் ஓர் உப்பு. (உயி)

spine - முள்: 1. இது தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படுவது. தாவரங்களில் கிளை அல்லது முள்ளாகும். மீன்களில் கூரிய முட்கள் இருக்கும். முள்ளுக்கு அடுத்த பகுதி சிறுமுள் ஆகும். 2 முதுகெலும்பு (உயி)

spinneret - பின்னி: பட்டு பின்னுவதற்காகச் சிலந்தியின் வயிற்றிலுள்ள இரட்டை ஒட்டுறுப்பு. தாவரத்தில் வலை பின்னவும், முட்டைக் கூட்டை உண்டாக்கவும், பிடித்த இரையைச் சூழ்ந்து கொள்ளவும் பயன்படுவது. (உயி)

spin - off technologies- விளை பயன் தொழில்நுட்பங்கள்: ஒரு முதன்மையான தொழில் நுணுக்கத்திலிருந்து கிடைக்கும் தொழில் நுட்பங்கள். எடுத்துக்காட்டாக, வான வெளித் தொழில் துணுக்கம் முதன்மைத் தொழில்துணுக்கம். இதிலிருந்து கிளைத்தது செயற்கை நிலாத் தொழில்நுட்பம் அல்லது தொலையுணர்தல். spiracle-மூச்சுவாய்: பூச்சி மூச்சுக் குழலின் வெளித்திறப்பு. முச்சு விடப் பயன்படுவது. (உயி)

spiral valveக்சுருள்திறப்பி: மென் படலச் சுருள்வடிவ மடிப்பு. எல்லா மீன்களின் குடலில் காணப்படுவது. உணவு செல்வதைத் தாமதப்படுத்திச் சுரத்தலுக்கும் உணவு உறிஞ்சப்படுதலுக்குமுரிய பரப்பை அதிக மாக்குவது. (உயி)

spirit-சாராயம்: இது மெத்தனால் கலந்த சாராயம். (மெத்திலேட்டேட் ஸ்பிரிட்டு), வடித்துப் பகுத்த சாராயம் (ரெக்டிபைடு. ஸ்பிரிட்) என இருவகைப்படும். முன்னதில் மெத்தில் ஆல்ககால், எத்தில் ஆல்ககால் ஆகிய இரண்டும் 110 என்னும் வீதத்தில் இருக்கும். இஃது ஓர் ஆய்வக எரிபொருள். பின்னது எத்தில் ஆல்ககாலை பலமுறை