பக்கம்:அறிவியல் அகராதி.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spr

412

sta


சிதல் தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இத்தலைமுறை ஓங்குதலை முறையாகும். இதில் தாவரமே உண்மையான பெரணி. பா. gametophyte. (உயி)

sprain - சுளுக்கு: ஓர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென்திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். அயோடக்ஸ் முதலிய வலி நீக்குமருந்தைத் தடவலாம். (உயி)

spring balance - வில்தராசு: பா.balance, spring (இய)

Sputnik - புட்னிக்: வானவெளி வரலாற்றில் 1957இல் உருசியா முதன்முதலில் ஏவிய செயற்கை நிலா. பா. satelite. (இய)

Sross- C2- சிராஸ் - சி2: இந்தியச் செயற்கை நிலா 1994 மே 4இல் ஏவப்பட்டது. ஏவுகை வெற்றி. எடை 113 கி.கி. ஏஎஸ்எல்வி டி4 ஏவுகணை ஏவியது. தொழில் நுட்பத்திற்காகவும் பயன்பாட்டிற்காகவும் (வா.அ)

stability - நிலைப்பு: உறுதிநிலை. பா. equilibrium. (இய)

stabilizer - நிலைப்பு : 1. வானூர்திக்கு நிலைப்பளிக்கும் கருவி. 2. வேதி மாற்றத்தை நிறுத்தச் சேர்க்கப்படும் பொருள். அதாவது, எதிரிடை வினையூக்கி, 3. மின்சாரத்தை ஒரே சீராக வைப்பது. (ப.து).

stable equilibrium - உறுதி சமநிலை: பா. equibrium.(இய)

staining- சாயமேற்றல்: உயிரியல் ஆய்வுகளில் பயன்படுவது. வேறுபட்ட உறுப்புகளின் மாறுபாட்டைக் காண்பிக்கப் பயன்படுவது. கறையேற்றல் என்றுங்கூறலாம். ஆய்வு நுணுக்கங்களில் ஒன்று. (உயி)

stainless steel - கறுக்கா எஃகு: 12% குரோமியம் சேர்ந்த எஃகு துருப்பிடிக்காதது. வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுவது. (வேதி)

stamen - மகரந்தத்தாள்: தாவர ஆண் இனப்பெருக்க உறுப்பு. அவரை விதை வடிவ மகரந்தப்பையும் அதைத்தாங்கும் மகரந்த இழையும் இதில் இருக்கும். மகரந்தத் தூள் மகரதந்தப்பையில் உண்டாகும். (உயி)

staminode -மலட்டு மகரந்தத்தாள்: இழையை மட்டுங் கொண்டிருப்பது : அத்தித்தட்டு, அல்லது தெரியக்கூடிய பகுதியாக இருப்பது : ஐரிஸ். (உயி)

standard cell - திட்ட மின்கலம்: ஓல்ட்டா மின்கலம். இதன் மின்னியக்கு விசைதிட்ட நிலையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. (இய)

standard pressure - திட்ட அழுத்தம்: 76 செமீ நீளமுள்ள பாதரசக் கம்பத்தின் அழுத்தம். காற்று 76 செமீ நீளமுள்ள பாதரசக் கம்ப அழுத்தத்தையே தாங்கும். இது அனைத்துலக