பக்கம்:அறிவியல் அகராதி.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sti

416

str


வால் மெலிந்து நீண்ட முதுகெலும்பு வாள் போன்றது. (உயி)

stipe - காம்பு: 1. பாசியில் இலைப் பரப்பிற்கும் பிடிப்பு உறுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி 2. நாய்க் குடையில் கனியுறுப்பின் காம்பு. (உயி)

stipule - இலையடிச் செதில்: மாற்றுரு பெற்ற இலை, இலையடிக் காம்பின் புறவளர்ச்சி செம்பருத்தி (உயி)

stock -1.அடி: ஒட்டைப் பெறும் செடியின் கீழ்ப்பகுதி 2. மரத்தின் முதன்மைத் தண்டு. (உயி)

stoichiometry- தனிம அளவை இயல்: தனிமங்கள் சேர்மங்களை உருவாக்கும் அளவுகள். (வேதி)

stolon - பெருகுதண்டு: 1. தாவர அடியிலிருந்து வளரும் தண்டு. மண்ணுக்குக் கீழ்க் கிடைமட்டமாக வளரும். கணுக்களில் வேர்விடும், அரும்புவிடும். எ-டு கூஸ்பெரி, சேனைக் கிழங்கு வகை. 2. குழிக் குடல்களில் கிளைத்த தண்டு போன்ற பகுதி இதிலிருந்து புதிய உயிரிகள் உண்டாகும். (உயி)

stoma - இலைத்துளை: தாவரப் புறத்தோல் அடுக்குகள் தொடர்ச்சியாக இரா. அவற்றில் பல நுண்ணிய துளைகள் காணப்படும். இவையே இலைத்துளைகள், இலைக்குக் கீழ்ப்பரப்பில் அதிகமிருக்கும்.

stomach - இரைப்பை: முதுகெலும்பிகளின் வலுவான தசைப்பை, உணவு இங்கு இரைப்பை நீரிலுள்ள நொதிகளால் செரிமானமும் பாகுநிலையும் அடைகிறது. (உயி)

stomach poison - இரைப்பை நஞ்சு: உண்டபின், உணவில் கலந்த நஞ்சு, குடலுக்குச் சென்று உயிரைக் கொல்கிறது. (உயி)

stomium - வாய்த்துளை: பெரணி முதலிய பூக்காத்தாவரங்களில் சிதல் பரவ உதவும் உறுப்பு. நீரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் செய்வது இதன் வேலைகள். (உயி)

stone cell-கல்லணு.: பா. Stereid

strain - 1. திரிபு: வில் சுருளில் தகைவினால் ஏற்படுவது. 2. சேர்வகை: கலப்பினமாக்கலால் புதிய வகையை உண்டாக்கல். 3. தோரிணி. (ப.து)

streamline motion - நீரோட்ட இயக்கம்: பொதுவாக, நீர்மம் ஒன்று பாயும் பொது, அதன் ஒவ்வொரு புள்ளியிலுமுள்ள விரைவு மாறாத ஒன்று. ஒவ்வொரு துகளும் அதற்கு முன் செல்லும் துகளின் வழியிலும் அதே நேர் விரைவுடனும் செல்லும். இந்த இயக்கம் கட்டுப்பாட்டிற்குரியது.

stress - தகைவு: திரிபை உண்டாக்குவது. ஒ. strain (இய)

striae - தழும்பு வரிகள்: வயிறு விரைவாகப் பருப்பதால், தோல் விரிந்து வயிற்றிலும் தொடையிலும் தழும்புகள் உண்டாதல். கருப்