பக்கம்:அறிவியல் அகராதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

axo

40

Bab


தாங்குவது. 2. தாவர அச்சு, தாவரத்தின் மைய அச்சு, இதில் தண்டும் வேரும் இருக்கும். (உயி)

axolot - முதிர் இளரி: ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva. (உயி)

axon - அச்சியன்: அச்சிழை. கண்ணறை உடலிலிருந்து துடிப்புகளை எடுத்துச் செல்லும் நரம்பிழை.(உயி)

azeotrope, azeotropic mixture - இணைஇயைபுரு, இணைஇயைபுருக் கலவை: நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குளோரிகக் காடிக் கரைசல். இக்கரைசலைக் கொதிநிலை மாறாக் கரைசல் என்றும் கூறலாம். (வேதி)

azimuth - உச்சி வரை: ஆயத் தொலைகளின் கிடைமட்டத் தொகுதி (கண)

azo-dyes - ஆசோ-சாயங்கள், வெடிவளிச் சாயங்கள்: நைட்ரஜன் (வெடிவளி) கூட்டுப் பொருள் உள்ளது. நிறம் மஞ்சள், சிவப்பு அல்லது செம்பழுப்பு. (வேதி)

azotobacter - அசொட்டோபேக்டர்: நைட்ரஜனை (வெடிவளி, வெடியம்) நிலைநிறுத்தும் குச்சியங்கள். வேளாண்மையிலும் தோட்டக் கலையிலும் சிறப்புள்ளவை. எ-டு. நைட்ரசமோனாஸ் என்னும் குச்சியம் அம்மோனியாவை நைட்ரேட்டு என்னும் உயிர்வளி ஏற்றம் அடையச் செய்தல். இவ்வுப்பை நைட்ரோபேக்டர் என்னும் குச்சியம் நைட்ரைட்டு என்னும் உப்பாக்குதல் (உயி)

azulene - அசூலின்: நீலமும் ஊதாவும் சேர்ந்த படிகங்கள். நாப்தலீன் போன்ற மனம் பயனுறு எண்ணெய்களிலிருந்து கிடைத்தல், ஒப்பனைப் பொருள்களில் பயன்படுதல் (வேதி)

azurite - அசூரைட்: Cu3(OH)2(CO3)2. இயல்பான அடிப்படைச் செம்புக் கார்பனேட். நீல நிறம். ஒவியர் நிறமாகப் பயன்படுதல். (வேதி)

azygospore - கலவியிலிச்சிதல்: கன்னிப் பிறப்பு முறையில் தோன்றி ஒய்வு கொள்ளும் கருச்சிதல். (உயி)

B

Babbit metal - பாபிட் உலோகம்: முதல் உலோகக் கலவை. 1839 இல் புனையப்பட்டது. புனைந்தவர் அமெரிக்கப் புனைவாளர் பாபிட் (1799-1862). (வேதி)