பக்கம்:அறிவியல் அகராதி.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sub

418

sub


தொடர்ந்து செல்வது. 2.எழுது கோல் போன்ற கருவி. எண் ணிலக்கக் கருவியிலிருந்து (டிஜிடைசர்) கணிப்பொறிக்குத் தகவல்களை மாற்ற வல்லது. (இய)

subscriber trunk dailing, STD - உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்: இது ஒரு தொலைபேசிப்பணி இயக்குபவர் இல்லாமல் நெடுந்தொலைவிலுள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள, உறுப்பினர் தொலைபேசிக்கருவி முகப்பைச் சுற்றுதல். இது நேரடிச் செய்தித் தொடர்பாகும். இதற்கென்று இப்பொழுது தனிவகை நிலையங்கள் உள்ளன. ஒரு நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிற்கும் (ஐ.எஸ்.டி) இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். (தொ.நு)

subscript -கீழ்க்குறி: ஓர் எண் அல்லது எழுத்திற்குக் கீழ் அச்சிடப்படும் சிறிய எழுத்து அல்லது எண். СO2, இல் (கரி ஈராக் சைடு) 2 என்பது கீழ்க்குறி. (இய)

sublimation-1. பதங்கமாதல்: ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தி நேரடியாக ஆவியாக்கல், எ-டு சூடம். அயோடின். ஆவியைக் குளிர்விக்க வெப்பப்படுத்திய திண்மம் மீண்டும் கிடைக்கும். கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று. பதங்கமாகும் பொருள் (சப்ளிமேட்) சூடம். 2. மடை மாற்றம்: தன் இயல்பான இலக்கிலிருந்து சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேறோரு இலக்கை நோக்கி, ஓர் இயல்பூக்கத்தை நல்வழிப்படுத்துதல். பாலூக்கம் பற்றி உளப்பகுப்பாளர்களால் முதன்முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. (ப.து)

submarines - நீர்மூழ்கி கப்பல்கள்: இவை மீன்வடிவிலுள்ளவை இவற்றிலுள்ள நிறை தொட்டியில் நீர் நிரப்ப நீரினுள் செல்லும், எடை அதிகமாவதால், நீரில் மூழ்கும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த இவை மீண்டும் நீரின் மேலே வரும். இவை புலனாய்வுக்கும் கடலாராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுபவை. (இய)

substitution reaction - பதிலீட்டுவினை: இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள நீர்வளி அணுக் களைக் கதிரவன் ஒளியில், குளோரின் அணுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர். இவ்விருவளிகளும் கதிரவன் ஒளியில் இவ்வினையில் ஈடுபட்டுப் பயனுள்ள வினைப் பொருள்களைத் தரும். எ-டு மெத்தில் குளோரைடு, மெத்திலின் குளோரைடு, குளோரபாம். மாற்றீட்டு வினை என்றும் கூறலாம். (வேதி)

substrate - 1. வினைப்படுவி: வினைப்படும் பொருள். நொதிச் செயலுக்குட்பட்டது. 2. படிபொருள்: உயிரி வாழும் அல்லது வளரும் உயிரற்ற பொருள்.