பக்கம்:அறிவியல் அகராதி.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tee

428

tei


களும் அத்துறையோடு தொடர்பில்லாத மற்றொரு துறையில் புதிய பொருள்களை உருவாக்கவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் பயன்படுதல். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நுண் மின்னணுவியல் (மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்) இதிலுள்ள ஒருங்கிணைப்புச் சுற்று (இண்டகரேட்டட் சர்குயிட்) வாணிபம், பொழுதுபோக்கு, கல்வி, ஆராய்ச்சி, வானவெளி ஆராய்ச்சி முதலிய துறைகளில் வெற்றியளிக்கும் வகையில் பயன்படுவது. வளரும் நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றிற்கு இது மிக இன்றியமையாதது. (ப.து)

teeth - பற்கள்: கடின வெண்ணிற உறுப்புகள். முதுகெலும்பிகளின் வாயில் அமைந்துள்ளவை. உணவை அரைக்கவும் பொருள்களைப் பற்றவும், கடிக்கவும், டோரிடவும் பயன்படுபவை. இவை வெட்டுப்பற்கள், கோரைப் பற்கள், கடைவாய் முன்பற்கள், கடைவாய்ப் பின்பற்கள் என நான்கு வகைப்படும். இவற்றில் சில மாற்றங்களும் உண்டு. பாம்பில் கோரைப்பல் நச்சுப் பல்லாகவும் யானையில் தந்தமாகவும் மாறியுள்ளது. (உயி)

telechirics-தொலை இடர்ப்பணி இயல்: பணியில் ஈடுபடுபவருக்கு எவ்வகை இடையூறுமின்றி. இடர்மிகு பணியினைத் தொலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள் வாயிலாக நிறைவேற்றப்படுவதை ஆராயுந்துறை, எ-டு. வானவெளிக்கப்பலைப் பழுது பார்த்தல், பா. robot (தொழி)

telecommunication - தொலைச் செய்தி்த் தொடர்பு: குறிகள், உருக்கள், ஒலிகள் ஆகியவற்றைச் செலுத்தும் அல்லது பெறும் முறை. இது ஒரு மின்காந்த முறை. எ-டு கம்பியிலாத் தந்தி, வானொலி, தொலைக்காட்சி. (உயி)

telecontrol - தொலைக்கட்டுப்பாடு: தொலைத்தொடர்பு மூலம் கருவியினால் நடைபெறும் கட்டுப்பாடு. வானவெளிச் செய்தித் தொடர்பில் பயன்படுவது. வானொலித் தொடர்பு வழியாகச் செயற்கை நிலாக்களைக் கட்டுப்படுத்தல். கோள்களில் இறங்கல். லூனிக்கு திங்களில் இறங்கியது. (தொழி)

telegraphy - தொலைவரைவியல்: எண், எழுத்து முதலியவற்றைக் குறியீடு செய்து அனுப்பும் தொலைத் தொடர்பு முறை. செய்தியைப் பதிவு செய்வது தொலை வரைவு. (இய)

telemeter - தொலைமானி: 1. இயற்பியல் அளவை அளக்குங் கருவி. எ-டு வெப்பநிலை, அழுத்தம். 2. தொலைவுகளை அளக்குங் கருவி, 3. ஒளிப்படப் பிடிப்பாளரின் எல்லைக்காணி. இய)

telemetering - தொலை அளவாக் கல்: இதில் செய்தித் தொடர்பு முறைகள் பயன்படுகின்றன.