பக்கம்:அறிவியல் அகராதி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tel

429

tel


இவை அளவு முடிவுகளை ஒரு மையத்திற்குப் பதிவு செய்வதற்காகவும் பகுப்பதற்காகவும் அனுப்புபவை. பா. telemetry (தொநு)

telematics - தொலைநுட்பவியல்: தொலை நுணுக்கவியல் , தொலைச் செய்தித் தொடர்பு முறைகள். கணிப்பொறிகள் ஆகியவற்றின் பொருளாதாரச் சிறப்பையும் சமுதாயச் சிறப்பையும் ஆராயுந்துறை. இது ஒரு செய்தி நுட்பவியலே. (தொநு)

telephone - தொலைபேசி: இதில் மின்தூண்டல் நெறிமுறை பயன்படுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கேட்கக்கூடிய பேச்சைக் கொண்டு செல்வது. இதில் பேச்சைப் பெறுங்குழாய் பேசுங்குழாயாகவும் உள்ளது. இதில் ஒலி ஆற்றல் மின்னாற்றலாகி, மீண்டும் ஒலியாற்றலாகிறது. இது 1876 இல் அமெரிக்காவைச் சார்ந்த கிரகாம் பெல் (1847-1922) என்பவரால் புனையப்பட்டது. (இய)

teleprinter-தொலையச்சு: செய்திகளைத் தானே அச்சு இயற்றுங் கருவி. செய்திகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தொலை வரைவி மூலம் இதற்கு அனுப்பப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் தட்டச்சுபயன் படுத்தப்படுகிறது. இது ஒரு தொலைத் தொடர்பு முறை. (இய)

television - தொலைக்காட்சி: வானொலி அலைகள் வாயிலாக உருக்களைச் செலுத்துவதும் பெறுவதுமாகிய முறை. தொலைக்காட்சிப் புகைப்படப் பெட்டியிலுள்ள ஒளிமின்னோட்டத்திரையில் செலுத்தப்பட வேண்டிய காட்சி குவியுமாறு செய்யப் படுகிறது. இத்திரையை மின்னணுக்கற்றை அலகிடுகிறது. புகைப்படப் பெட்டி உண்டாக்கும் மின்னோட்டத்தின் செறிவு அலகிடப்படும் திரைப்பகுதியின் ஒளிர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. இவ்வாறு உண்டாக்கப்பட்ட படக்குறியீடு ஊர்தி அலைக்குத் தகுந்தவாறு பண்பேற்றம் (மாடுலேஷன்) செய்யப் படுகிறது. தனித்த ஒலிக்குறியீட்டுடனும் பட வரிகளுக்கு இடையிலுள்ள குறுகிய வெளிகளில் செய்தி பொருந்துமாறும் அது செலுத்தப்படுகிறது. பெறும் அலை வாங்கியினால் ஏற்கப்படும் குறியீடுகள் உரிய பண்பிறக்கம் (டிமாடுலேஷன்) செய்யப்படுகிறது. இம்மாற்றம் செய்யப்பட்ட குறியீடு எதிர் மின் கதிர்க் குழாயிலுள்ள மின்னணுக் கற்றையைக் கட்டுப்படுத்துகிறது. இக்குழாயின் திரையில் படம் மீண்டும் சீரமைப்பு பெறுகிறது. இப்பொழுது நாம் காட்சியை ஒலியுடன் பார்க்கிறோம். தொலைக்காட்சி வண்ணக் காட்சி, கறுப்பு வெள்ளை கலந்த காட்சி என இருவகைப்படும்.