பக்கம்:அறிவியல் அகராதி.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ten

431

ter


இணைப்புத் திசுவின் விறைப்பான புரிகள். இதய இட வல கீழறைகளின் சுவர்களிலுள்ள தசைகளுக்கு ஈரிதழ் திறப்பி, மூவிதழ் திறப்பி ஆகியவற்றின் கீழ்ப்பக்கங்களிலிருந்து இப் புரிகள் செல்பவை. கீழறை சுருங்கும் பொழுது குருதி மேலறைக்கு வராமல் பார்த்துக் கொள்பவை. (உயி)

tendon - நாண்: தசையை எலும்போடு இணைக்குங் கயிறு. வெண்ணிற நார்த்தன்மையுள்ள இணைப்புத்திசு இழைகளாலானது. (உயி) .

tendrils - பற்றுக்கம்பிகள்: மெல்லிய கம்பிச்சுருள் போன்ற பகுதிகள், தொடுஉணர்ச்சி மிக்கவை. பற்றுதலாகிய சிறப்பு வேலையைச் செய்ய, இலையின் மாறிய பகுதிகள், பிரண்டையில் நுனி மொட்டும், பாசி புளோராவில் கோண மொட்டும், பட்டாணியில் இலையும், கிளிமேடிசில் இலைக்காம்பும் பற்றுக் கம்பிகளாகியுள்ளன. (உயி)

tentacle-உணர்விரல்: 1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளது. எ-டு. கதிரவன், மின்மினி. இது ஒரு பூச்சியுண்ணுந் தாவரம். (உயி)

terbium - டெர்பியம்: Tb. மென்மையான வெள்ளிநிறத் தனிமம். ஏனைய இலாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ள திண்ம நிலைக் கருவிகளில் மாசு பொருளாகப் (டோபண்ட்) பயன்படுவது. (இய)

tergum - முதுகுத்தகடு: கைட்டினால் கடினமாகிய தகடு. பூச்சியின் வயிறு, மார்பு ஆகியவற்றின் ஒவ்வொரு கண்டத்தின் முதுகுப்புறப் பாதுகாப்பு உறையைத் தோற்றுவிப்பது. பா. pleuron sternum (உயி)

terminal - முனை: மின்சுற்றுப் புள்ளி. இதனுடன் கடத்தி ஒன்றை இணைக்கலாம். 2. முனையம்: பல கட்டடங்கள் தொகுதியாகக் கருவியமைப்புகளுடன் உள்ள இடம் (இய)

terminal bud - முனைமொட்டு: தாவரநுனிமொட்டு. (உயி)

terminal velocity - முடிவுறு நேர்வரைவு: பாகியல் பண்புள்ள நீர்மம் ஒன்றில் கடினக் கோளம் ஒன்றை நழுவவிடும்பொழுது, முடுக்குள்ள அதன் விரைவு, நீர்மப்பாகியல் பண்பினால் தடுக்கப்பெற்று, மாறாப் பரும நேர் விரைவைப் பெறும். மாறா இப்பரும நேர்விரைவே முடிவுறு அல்லது முற்றுறு நேர்விரைவு ஆகும். (இய)

termite - கரையான்: உயரிய வகைச் சமூகப்பூச்சி. இதில் அரசி, போர் வீரர்கள், வேலையாட்கள் என மூன்று பிரிவுண்டு. மரவூட்டமுள்ள பொருளை