பக்கம்:அறிவியல் அகராதி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

the

435

thr


தப்படும் போது, முன்னதாகவும் நன்கு பூக்கின்றன. எ-டு கிரை சாத்திமம், தக்காளி, பா. photoperiodism, vernalization. (உயி)

thermosflask - வெப்பக்குடுவை: பா. Diwarfask.

thermostat - வெப்பமாற்றி: குறிப்பிட்ட பாகை அளவுக்கு வெப்ப நிலையைச் சீராக்கும் கருவி (இய)

thickening, secondary-இரண்டாம் நிலைத் தடிப்பு: பா. Secondary growth. (உயி)

thigmotropism - தொடுநாட்டம்: தொடு உணர்ச்சியான தூண்டலுக்கேற்ற துலங்கல், தொட்டாற் சுருங்கி (உயி)

thin layer chromatography - மென்படல நிறவரைவியல்: ஒரு வகை நிற வரைவு முறை. பா. chromatography (வேதி)

thixotropy-தொடுவேற்றுமை: சில கூழ்மங்கள் பெற்றிருக்கும் பண்பு. குலுக்கும் பொழுது அவை நீர்மமாகும். குலுக்கல் நின்றபின், அவை மீண்டும் படியத் தொடங்கும். எ-டு வண்ணக் குழம்பு (பெயிண்ட்)(வேதி). thoracic vertebrae - மார்பு முன் எலும்புகள்: மேல் முதுகுப் பகுதியில் உள்ளவை. மனிதனிடத்து 12 உள்ளன. பா. backbone (உயி)

thorax- மார்பு: தலைக்கடுத்துள்ள உடற்பகுதி. இது நுரையீரல்களுக்கும் இதயத்திற்கும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மார்புக்கூடு அமைந்துள்ளது. இதன் வழியே உணவு வழியின் பகுதியான உணவுக் குழல் செல்கிறது. (உயி).

thorium - தோரியம்: Th. மென்மையான கதிரியக்கத் தனிமம். வெண்ணிறம், காற்றில் படக் கறுக்கும். இதன் முக்கிய தாதுக்கள் மோனசைட் ஆர்க்கனைட் தோரைட் (வேதி)

thorn - பெருமுள்: இது கூர்முள். கிளை குறைந்து மாறுவதால் உண்டாவது, எ-டு. கருவை. பா. spine. (உயி)

threshold - உறுத்துவாயில்: தசை நரம்பு முதலிய உறுத்து திசுக்களில் துலங்கலைத் தொடக்க வேண்டிய குறைந்த அளவு தூண்டல் செறிவு. (உயி)

thrombin-திராம்பின்: ஒரு நொதி. கரையக்கூடிய புரத பைபிரினோஜனை நார் பைபிரினாகக் குருதிக்கட்டின் பொழுது மாற்றுவது. (உயி)

thrombocyte - திராம்பணு: பா.platlet. (உயி)

throttle valve - தொண்டைத்திறப்பி: இஃது அகக்கனற்சி - எந்திரம், புறக்கனற்சி எந்திரம் ஆகிய இரண்டிலும் உள்ளது. அகக்கனற்சி எந்திரத்தில் இதன் வேலை வெடிகலவையின் (காற்று + பெட்ரோல்) அளவைத் தேவைக்கேற்றாற்போல் மட்டுப்படுத்துவது ஆகும். புறக்கணற்சி எந்திரத்தில் நீராவிக் கலத்திலுள்ள அதிக அழுத்த நீராவி, நீராவிப்