பக்கம்:அறிவியல் அகராதி.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tri

444

tro


குடி இனங்கள் சேர்ந்து உட் குடும்பத்தைத் தோற்றுவித்தல். புற்கள் போன்ற பெரிய குடும்பங்களை வகைப்படுத்தும் பொழுது இது பயன்படுகிறது. ஒரைசீ. ட்ரைடீசி, ஆவினி ஆகியவை பூயிடி உட்குடும்பக் குடி இனங்கள். (உயி)

trichome - தூவி: ஒரு கண்ணறை அல்லது பல கண்ணறையுள்ள புறவளர்ச்சி. புறத்தோலிலிருந்து கிளம்புவது. (உயி)

tricuspid valve-மூவிதழ் திறப்பி: மூன்றுபடல மடிப்புகளைக் கொண்டது. இதய வலது மேலறைக்கும் கீழறைக்கும் இடையே உள்ளது. வலது கீழறை சுருங்கும்பொழுது குருதி வெளியேறுமே ஒழியத் திரும்ப வலது மேலறைக்குச் செல்லாது. இதை இவ்வாறு செய்வது இத்திறப்பியே. ஒ. (உயி)

trifoliate - முக்கூட்டிலை: ஒரே புள்ளியிலிருந்து கிளம்பும் மூன்று தனிச்சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை : அவரை. (உயி)

triggering circuit -விசைப்பு மின் சுற்று. (இய)

trimer - முப்படி: ஒத்த மூன்று மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உண்டாகும் மூலக்கூறு அல்லது சேர்மம். (வேதி)

triode - மும்முனைவாய்: மூன்று மின்வாய்களைக் கொண்டது. (இய)

triple bond-முப்பிணைப்பு: மூவினை மின்னணுக்கள் பங்கு கொள்ளும் இரு அணுக்களிடையே உண்டாகும் உடன் பிணைப்பு மரபு வழியில் மூன்று கோடுகளாகக் காட்டப்பட்டிருக்கும். Н-С = С-Н (வேதி)

triple point -முந்நிலை: வளி,நீர்மம், திண்மம் ஆகிய முந்நிலைப் பொருள்களும் சமநிலையில் இருக்கும் ஒரே நிலை. (வேதி)

triploblast -முப்படை: உடல் மூன்று அடுக்குகளாலாகிய உயிரி. எ-டு மண்புழு.புரோட்டோசோவா, கடற்பஞ்சுகள். குழிக்குடலிகள் மட்டும் முப்படை இல்லாதவை. (உயி)

triploid - மும்மம்: ஒற்றைப்படை நிறப்புரிபோல் மூன்று மடங்கு நிறப்புரிகளைக் கொண்ட உயிரி. பா. (உயி)

Trishul - திரிசூல்: தரையிலிருந்து காற்று வெளிச் செல்லும் எறி படை இதன் தாக்கெல்லை 500 கி.மீ. சண்டிப்பூர் இடைக்கால ஆய்வு எல்லையிலிருந்து 28-12-96 அன்று வெற்றியுடன் விடப்பட்டது. போர்ப்படை, வானப்படை கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் இது உதவும். (தொ.நு)

tritium - டிரைடியம்: T. முப்பொருண்மை கொண்ட நீர் வளியின் கதிரியக்க ஓரிமம் (வேதி)

trochophore-குஞ்ச இளரி: மெல்லுடலிகள், வளைய உடலிகள் முதலியவற்றின் இளமுயிரி. மயிரி