பக்கம்:அறிவியல் அகராதி.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tun

446

tyn


பழைய பெயர் உல்பரம், அரிய மாறுநிலை உலோகம். வெண்ணிறம், முதன்மையாக உல்பரமைட்டிலிருந்து பெறப்படுவது. ஒளிர்விளக்குகள் இழைகள் செய்யவும் உயர் விரைவு எஃகு செய்யவும் பயன்படுதல். (வேதி)

tunica - அகலுறை: பல படலங்களைக் குறிக்கும். எ-டு புறவுறை, உள்ளுறை, நடுவுறை (தமனி) (உயி).

tunica-carpus theory-அகலுறை இகலுறைக் கொள்கை: முனைத் திசு அமைப்பு பற்றியும் வளர்ச்சி பற்றியும் கூறுங்கொள்கை. இதில் இருதனித்திசுப் பகுதிகள் உண்டு. அவையே இகலுறையும் அகலுறையும். இகலுறை: திசுவின் உட்பகுதி. கண்ணறைப் பிரிவு ஒழுங்கற்றது. அகலுறை: ஒருங்கடுக்குகளாலானது. இதில் கண்ணறைப்பிரிவு ஆரப் போக்குடையது. (உயி)

tuning fork-இசைக்கவை: கேட்டலை ஆய்ந்தறியப் பயன்படும் கருவி.

turbine - விசையாழி: காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் உந்தி. இதில் ஓர் ஆழியில் தகடுகள் செங்குத்தாக அடுத்தடுத்திருக்கும். இந்த ஆழி ஓர் உந்தியோடு இணைக்கப்பட்டிருக்கும். தகட்டில் நீராவி செல்லும், ஆழி உருளுவதால், உந்தியும் இயக்கப்படுகிறது. இயக்கும் ஆற்றலுக் கேற்ப, இது காற்றாழி, நீராழி, நீராவியாழி எனப் பல வகைப்படும். (இய)

turbo generator -விசையாழி இயற்றி: விசையாழிப்பிறப்பி ஒரு மின்னியற்றியை இயக்கும் நீராவி விசையாழியாகும். (இய)

turgor pressure -விறைப்பழுத்தம்: பா. turgor (உயி)

turpentine -கற்பூரத்தைலம்: பைன் மரங்களின் பிசுமத்தைக் காய்ச்சி வடிக்க, இந்நீர்மம் கிடைக்கும். கரைப்பான். (வேதி)

turtle - கடலாமை: கடலில் வாழ்வது, பல்லில்லை. மென்மையான உடல், கடின ஓட்டில் உள்ளது. இந்த ஓட்டிலேயே இதன் தலை, கால், வால் எல்லாம் அடங்கியுள்ளன. முன்புறத்துறுப்புகள் நீந்துவதற்குத் துடுப்புகளாகியுள்ளன. (உயி)

twins - இரட்டை(யர்): ஒரே கரு முட்டையிலிருந்து உருவாகும் இரு தனி உயிர்கள். ஒன்று மற்றொன்றைப் போலவே இருக்கும். புகழ்மிக்க ஆர்க்காட்டுச் சகோதரர்கள் (இலட்சுமணசாமி, இராமசாமி) இரட்டையர்களே. (உயி)

tympanum - செவிப்பறை: புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ள பகுதி. ஒலி அதிர்வுகளை உட்செவிக்குச் செலுத்துவது.

type specimen-வகைமாதிரி: சிறப்பினம் அல்லது துணைச் சிறப்பினத்தை விளக்கவும் பெயரிடவும் உதவும் போலிகை, (உயி)

Tyndall effect - டிண்டல் விளைவு: ஒளிவழியில் கூழ்மத்