பக்கம்:அறிவியல் அகராதி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

typ

447

uln


துகள்களால் ஒளிச்சிதறல் ஏற்படுதல். இதனால் பார்க்கக்கூடிய ஒளிக்கற்றை உண்டாகிறது. இந்நெறிமுறை மீ நுண்ணோக்கியில் பயன்படுகிறது. (இய)

type-1.மாதிரி: ஒரு சிறப்பினத்தை வரையறுக்கப் பயன்படும் பொருள். இது உலர்ந்த பொருளாகவோ வரைபடமாகவோ இருக்கலாம். ஒரு பேரினத்தின் மாதிரி வகையையும் குடும்ப மாதிரிப் பேரினத்தையும் விளக்கப் பயன்படும் சொல், எ-டு பேரினம் சொலானம் என்பது சொலனேசிக் குடும்பத்தின் மாதிரிப் பேரினமாகும். 2.வகை. வேதி மாற்ற வகை. 3. அச் செழுத்து. (ப.து)

type metal - அச்சு உலோகம்: ஓர் உலோகக் கலவை. காரீயம், ஆண்டிமணி, வெள்ளீயம் ஆகியவை குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்தது. ஆண்டிமணி கடினத்தைக் கொடுப்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது புத்தக எழுத்துகளில் இது குறைவாகவும் சில்லறை வேலை எழுத்துகளில் அதிகமாகவும் இருக்கும். இதற்கேற்ப விலையும் கூடும். (வேதி)

typhoid fever -முறைக்காய்ச்சல்: கொடிய தொற்றுநோய். வாழ்நலம் குறைவாகவுள்ள இடங்களில் ஏற்படுவது.சால்மோனிலா டைப்பி என்னும் நுண்ணுயிரியினால் உணவு மூலம் ஏற்படுவது.அடைகாலம் 14 நாட்கள். ரோஜா நிறத்தடிப்பு முதுகிலும் வயிற்றிலும் முதல்வார முடிவில் ஏற்படும். (உயி)

typhoon -சூறாவளி: வடக்குப் பசிபிக் பெருங்கடலி லும் தென்சீனக் கடலிலும் ஏற்படும் வெப்பமண்டலக் காற்று.பா. cyclone, hurricane. (பு:அறி)

typhus - ரிக்கட்சியால் காய்ச்சல்: அதிகம் தொற்றக் கூடியது. தடிப்பு தாளாத தலைவலி, உயர் வெப்பநிலை முதலியவை அறிகுறிகள். தொற்றுள்ள பேன்கள் அல்லது எலித் தெள்ளுப் பூச்சிகளிலிருந்து வரும் ரிக்கட்சியால் பொருள்களிலிருந்து உண்டாவது. இதை உண்டாக்குந் தொற்றுயிரி ரிக்கட்சியா புரோவா செகி, சல்பனாமைடு மருந்துகள் பயன்படுத்தப்படலாம். (உயி)

tyrosine-டிரோசின்: பொதுவான அமினோ காடிகளில் ஒன்று. பா.aminoacids.(வேதி)


U

udder-மடி: பசு முதலிய பாலூட்டிகளின் புறத்துறுப்பு. இது பால் சுரப்பிகளையும் காம்பையும் கொண்டது. (உயி)

udometer-மழைமானி மழையை அளக்கும் கருவி. (இய)

ulna - முன்கைஎலும்பு: முன்கையில் அமைந்துள்ள இரு எலும்புகளில் பெரியது. சிறியது ஆர எலும்பு (உயி)