பக்கம்:அறிவியல் அகராதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bar

43

bar


பிளாஸ்டிக் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

barbiturates - பார்பிடுரேட்டுகள்: மருந்துத் தொகுதி பார்பிடுரிகக் காடி உப்புகள். எ-டு. அலோனால், வெரோனால், லூமினால். (வேதி)

barbule - சிறுசுணை. பா. contour feather (உயி)

Barfoed's reagent - பார்போர்டு வினையாக்கி: செம்பு (II) அசெட்டெட், எத்தனாயிகக் காடி ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. எத்தனாயிகக்காடி என்பது அசெட்டிகக் காடியே. ஒற்றைச் சர்க்கரைகளைக் கரைசல் நிலையில் பார்க்கப் பயன்படுவது. இக்கலவையை ஒற்றைச் சர்க்கரையுடன் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (I) ஆச்சைடின் செந்நிற வீழ்படிவு உண்டாகும். (வேதி)

barium - பேரியம்: Ba. மென்மையான வெண்ணிற உலோகம். காற்றில்பட நிறம் மங்கும். உலோகக் கலவை செய்யப் பயன்படுவது. (வேதி)

barium carbonate - பேரியம் கார்பனேட்: BaCO3, கரையாத வெண்ணிற உப்பு. எலி நஞ்சாகப் பயன்படுவது. (வேதி)

barium chloride - பேரியம் குளோரைடு: BaCl2, வெண்ணிறத் திண்மம். எலி நஞ்சு, தோல் தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

barium meal - பேரியம் உணவு: வாய்வழியாகப் பேரியம் சல்பேட் எடுத்துக் கொள்ளப்படுதல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி, ஆய்வுக்கு ஏற்றதாகிறது. வேறு பெயர் பேரியக்குடல் கழுவல் (பேரியம் எனிமா). (மரு)

barium sulphate - பேரியம் சல்பேட்: BaSO4. வெண்ணிறத் திண்மம். மேற்பரப்புப் பூச்சுகளில் நிறமி விரிவாக்கியாகப் பயன்படுதல். மற்றும் கண்ணாடித் தொழிலும் ரப்பர் தொழிலும் பயன்படுதல். (வேதி)

bark - பட்டை: நடுமரம், தண்டு, வேர் ஆகிய பகுதிகளைக் குழ்ந்துள்ள புறவுறை. பா. cork(உயி)

barley- பார்லி: அரிசி, கோதுமை போன்று ஸ்டார்ச் அதிகமுள்ள தானியம். புல் வகையைச் சார்ந்தது. (உயி)

barn - பார்ன்: அணுக்கருச் சிதறல்களில் குறுக்கு வெட்டுப் பகுதிகளை அளக்கப் பயன்படும் பரப்பலகு. 1020 சதுர மீட்டருக்குச் சமம். (வேதி)

Barnet effect - பார்னட் விளைவு: காந்தமில்லாக் கோல் ஒன்று, தன் அச்சைச் சுற்றி உயர் விரைவில் சுழலும் பொழுது, அதில் சிறிதளவு காந்த ஆற்றலை உண்டாக்கும். (இய)

barograph - பாரவரைவி: ஒரு குறிப்பிட்ட காலத்தில் காற்று வெளி அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக் தாளில் பதிவு