பக்கம்:அறிவியல் அகராதி.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ult

448

uni


ultra centrifuge- மீ விரை மைய விலக்கி: மீ விரை மைய (விலகு விசை) விலக்கியால் மிகச் சிறிய துகள்கள் பிரிக்கப்படுதல். இது ஒரு நுணுக்கமாகும். (இய)

ultra microscope -மீ நுண்ணோக்கி: டிண்டால் விளைவைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இயல்பான ஒளி நுண்ணோக்கியால் பார்க்க இயலாத துகள்களைப் பார்க்க இயலும் (இய)

ultra short waves -மீ குற்றலைகள்: மிகக் குறுகிய மின்காந்த அலைகள். அலைநீளம் 10 மீட்டருக்குக் கீழ் இருத்தல், (இய)

ultrasonics -மீவொலி இயல்: அதிக அதிர்வெண்ணுள்ள ஒலி அலைகளைப் பற்றி ஆராயுந்துறை. இயற்பியலின் ஒரு பிரிவு. கேளா ஒலியியல் என்றும் கூறப் பெறுவது. (இய)

ultraviolet microscope -மீ ஊதாக்கதிர் நுண்ணோக்கி: ஒளியூட்டலுக்கு மீ ஊதாக்கதிர் வீச்சைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இதில் கல்ம (குவார்ட்ஸ்) வில்லைகளும் நுண்வில்லைகளும் பொருந்தி இருக்கும்.

ultraviolet rays, radiation - மீ(ப்புற) ஊதாக்கதிர்கள். புற ஊதாக்கதிர்வீச்சு: மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ் கதிர்களுக்கும் இடையிலுள்ளது. மருத்துவத்துறையிலும் உணவுத்துறையிலும் பயன்படுதல். (இய)

Ulysses spacemission-உலிசஸ் வானவெளி ஆய்பயணம்: இது ஈசா, நாசா ஆகிய இரண்டும் சேர்ந்து நடத்திய பயணம். இந்த வானவெளித் துருவி 1990 அக்டோபரில் ஏவப்பட்டது. இது தன் இலக்கை அடைந்து கதிரவனை ஆராய்ந்து பல நல்ல முடிவுகளைத் தெரிவித்துள்ளது.

umbel-குடைக்கொத்து: முடிவற்ற பூக்கொத்து, எ-டு வெங்காயம்.

umblical cord -தொப்பூழ்க் கொடி: கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும்.

ungulate - குளம்பு விலங்குகள்: குளம்பிகள். இவை தரையில் நடப்பன. அதற்கேற்றவாறு குளம்பு காலடியில் இருக்கும். எ-டு பசு, குதிரை, ஆடு (உயி)

unicellular -ஒற்றைக் கண்ணறையுள்ள: எ-டு அமீபா ஒ.acellular. (உயி)

uniform motion -ஒருசீர் இயக்கம்: ஒரு பொருள் சம அளவு காலங்களில் சம அளவு இடப்