பக்கம்:அறிவியல் அகராதி.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ura

450

use


ஆகியவற்றோடு எளிதாகச் சேரும். இதன் தாது பிட்சு பிளண்டு. இதனை 1789இல் கிளாப்ராத்து என்பவர் கண்டறிந்தவர். இதன் கதிரியக்கப் பண்பினை முதன்முதலில் 1895இல் பெக்கரல் கண்டறிந்தார். இது யுரேனியம் ஆக்சைடாகக் கிடைக்கிறது. உட்கருப்பிளவில் அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்துவது. ஏனைய தனிமங்களைப்போல், இது உலகில் அதிக அளவு இல்லாதது. (இய)

Uranus - யுரேனஸ்: சனி, நெப்டியூன் ஆகிய இரு கோள்களுக்கிடையே தன் சுற்று வழியைக் கொண்ட கோள். (வானி)

Urea - நீரிய உப்பு: 1. கார்பமைடு (NH2CONH2).வெண்ணிற படிகச் சேர்மம். அம்மோனியா, கரி ஈராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யூரியா, பார்மல்டிகைடு பிசியங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுதல். நீரில் கரையக்கூடிய நைட்ரஜன் கூட்டுப் பொருள். H2NCONH2 கார்பானிகக் காடியின் ஈரமைடு, சிறுநீர், குருதி, கொழுப்பு நீர் ஆகியவற்றில் காணப்படுவது. புரத வளர்சிதை மாற்றத்தின் முதன்மையான நைட்ரஜன் சார் முடிவுப் பொருள். அமினோ காடி, அமோனியா கூட்டுப் பொருள் ஆகியவற்றிலிருந்து கல்லீரலில் உண்டாவது. (உயி)

Urea cycle-நீரிய உப்புச்சுழற்சி: இதற்கு வேறுபெயர் ஆர்னிதைன் சுழற்சி.இதில் நொதிக்கட்டுப்பாட்டு வினைகள் தொடர்ச்சியாக நடைபெறுதல். இதில் அமினோகாடிகளின் முறிவுப் பொருளாக, யூரியா உண்டாதல். இது கல்லீரலில் நடைபெறுகிறது.(உயி)

ureter - சிறுநீர்க்குழாய்: சிறுநீரிலிருந்து சிறுநீர்ப்பைக்குச் செல்லும் குழாய், அப்பைக்குச் சிறுநீரைக் கொண்டு செல்லுவது. (உயி)

urethra - சிறுநீரகற்றி: சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய். (உயி)

urine - சிறுநீர்: சிறுநீரகம் சுரக்கும் கழிவு, சிறுநீர் வழிமூலம் வெளியேறுவது. யூரியா அல்லது யூரிகக் காடியைக் கொண்டது. ஏனைய பொருள்களும் சிறிய அளவில் இருக்கும். (உயி)

uriniferous tuble -சிறுநீரகக்குழலி: நீண்டதும் குறுகியதுமான குழாய். சிறுநீர்ப்பிரித்தியின் பகுதி. (உயி)

urochordata-வால்முதுகுத்தண்டு உடையன: அகலுறை விலங்குகள்: சியானா, தண்டுடைய விலங்குகளின் ஒரு பிரிவு. (உயி)

uroscopy - சிறுநீர்நோக்கல்: சிறுநீரை ஆய்ந்து நோய்கூறைக் கண்டறிதல். (உயி)

user - பயனாளி: கணிப்பொறியினால் பயன்பெறுபவர். (இய)

user programme -பயனாளி