பக்கம்:அறிவியல் அகராதி.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ute

451

vac


நிகழ்நிரல்: பயன்பெறுபவருக்குரிய கணிப்பொறி நிகழ்ச்சி. பா, programme. (இய)

uterus-கருப்பை: பெண்ணிடத்துக் கருக்குழலின் விரிந்த பகுதி. இதில் முட்டைகள் வளரும்.(உயி)

V

vacancy-வெற்றுப்பாடு: பா. defect (இய)

vaccination - அம்மை குத்துதல்: தடுப்பாற்றலை உண்டாக்க எதிர்ப்புத் தூண்டு பொருளை, உயிர்களிடத்துச் செலுத்துதல். இம்முறையை 1796இல் ஜென்னர் (1749-1823) கண்டறிந்தார். வேறு எதிர்ப்புத்தூண்டு முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், இம்முறை இப்பொழுது பழக் கத்தில் இல்லை. ஆவைன் குத்து தல் என்றும் கூறலாம். (உயி)

vaccine - ஆவைன்: நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம் ஆவைனை உடலில் செலுத்துவதற்கு ஆவைன் செலுத்துதல் (வேக்சி னேஷன்) என்று பெயர். 1953இல் ஜோனஸ் சால்கு என்பார், சால்க் ஆவைன் என்னும் தடுப்புமருந்தைக் கண்டறிந்தார். இது ஊசி மூலம் செலுத்தும் போலியோ தடுப்பு மருத்தாகும். அண்மையில் உயிருள்ள ஆனால் வலுக்குறைந்த நச்சியங்களைப் பயன்படுத்தி விழுங்கக்கூடிய மாத்திரைகளை உண்டாக்கி யுள்ளனர். இதற்குச் சாபின் ஆவைன் என்று பெயர். இதைக் கண்டறிந்தவர் டாக்டர் ஆல்பர்ட்டு சாபின், போலியோவை ஒழிக்க 1985இல் போலியோ முனைவுத் திட்டம் (போலியோ பிளஸ் புரோகிராம்) அனைத்துலகச் சுழற்சங்கத்தினால் தொடங்கப்பட்ட பெருந் திட்டம். இதனால் இலட்சக் கணக்கில் குழத்தைகள் பயனடைந்தனர். ஆவைன் செலுத்துவதின் முதன்மையான நோக்கம் இதுவே. உடலில் குறிப்பிட்ட நோய்க்கு எதிராக எதிர்ப்பாற் றலை செயற்கையாக உண்டாக் கலாம். பா. cel. (உயி)

vacuole - நுண்குமிழி: உயிரணுவில் உள்ளது. இதில் பாய்மம் நிரம்பியுள்ளது. உயிரணு நீட்சியின் போது, ஊடுபரவலால் அதிக அளவு நீரை உயிரணுக் குமிழி உட்கொள்வதற்கு குமிழி நீர்ப் பருகுதல் (வேக்யோலேஷன்) என்று பெயர். (உயி)

vaccum - வெற்றிடம்: ஒரு வளியைக் காற்றுவெளி அழுத்தத் திற்குக் கீழ்க் கொண்டுள்ள இடம். நிறைவெற்றிடம் பருப் பொருளைக் கொண்டதன்று.