பக்கம்:அறிவியல் அகராதி.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vac

452

van


மென்வெற்றிடம் (10-2பாஸ்கல்), வன்வெற்றிடம், மீ வெற்றிடம் (10-2 பாஸ்கலுக்குக் கீழ்) என வெற்றிடம் மூன்று வகைப்படும். (இய).

vacuum distillation -வெற்றிட வடித்துப்பகுத்தல்: குறைந்த அழுத்தத்தில் நீர்மங்களை வடிக்கும் முறை. இதனால் கொதிநிலை உயரும் அல்லது தாழும். இது நீர்மக் கலவையைப் பிரிக்கும் முறை. (வேதி)

vacuum metallising -வெற்றிட உலோகப்படிய வைப்பு: பூசும் உலோகத்தை முதலில் ஆவியாக்கி, அந்த ஆவியை மட்ட உலோகத்தின் மீது செலுத்திக் குளிர வைக்கும்பொழுது, பூசும் உலோகம் மெல்லிய படலமாக அதன் மீது படிகிறது. வெப்ப ஆவியாக்கல், எதிர்மின்வாய் உமிழ்வு ஆகிய முறைகளில் செய்யப்படுவது. (வேதி)

Vacuum pump -வெற்றிட எக்கி: ஒரு கொள்கலத்திலுள்ள வளி யழுத்தத்தைக் குறைக்கப் பயன் படும் இழுகுழாய். (இய)

vacuum tube-வெற்றிடக் குழாய்: பா, thermionic valve. (இய)

vagina - புணர்வழி: விலங்குகளின் பெண் பிறப்பு உறுப்புகளில் முட்டை செல்லும் குழல்வழி, இது கருப்பைக்குச் செல்வது. (உயி)

valency -இணைதிறன்: ஒர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குந்திறன். இத்திறன் அணுக்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். இதை வேறுவகையிலும் கூறலாம். ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஓரணுவுடன் கூடும் நீர்வளி அணுக்களின் எண்ணிக்கையின் இருமடங்காகும். இது ஒரு முழு எண். எ.டு நீர்வளி. 1. உயிர்வளி 2. நைட்ரஜன் 3. கரி 4. பாசுவரம் 5. கந்தகம் (வேதி)

valve - திறப்பி: தடுக்கிதழ். ஒர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே ஒரு சமயத்தில் திறக்கும் அமைப்பு. அதாவது ஒரு சமயம் திறக்கும் மற்றொரு சமயம் மூடும். எ-டு இதயத்தில் ஈரிதழ், மூவிதழ் திறப்பிகள், அகக்கனற்சி எந்திரத் தில் உள்விடு வெளிவிடு திறப்பி கள். (ப.து)

valvate - தொடு இதழமைவு: புல்லிகள் அல்லது அல்லிகள் பக்கம் வெளியே பிதுங்காமல் அமைந்திருத்தல். அதாவது, அவை ஒரே வட்டத்தில் அமைந் திருக்கும். எ-டு செம்பருத்தி. பா. aestivation (உயி)

vanadium -வெனாடியம்: V. கடினமும் உறுதியும் வாய்ந்த உலோகம், இது வெனாடியம் எஃகுவும் அதன் சேர்மங்களும் செய்யப் பயன்படுதல். (வேதி)

Van Allen radiation belts -வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள்: 1958இல் நிலா எக்ஸ்புளோரர் 1