பக்கம்:அறிவியல் அகராதி.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Van

453

vas


இவற்றைப் புலப்படுத்தியது. 1959இல் பயனியர், எக்ஸ்புளோரர் நிலாக்கள் அளித்த தகவல்களை அமெரிக்க இயற் பியலார் ஜேம்ஸ் வேன் ஆலன் என்பார் (1914- ) தம் குழுவினருடன் ஆராய்ந்து, இவ்வளையங்கள் இருப்பதை உறுதி செய்தார். இது புறவளையம், அகவளையம் என இரண்டாலானது. புவிமேற்பரப்பிலிருந்து 40,000 மைல் வரை பரவியுள்ளது. புவியிலிருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது. இது வானவெளி ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. (இய)

Van der Waals equation-வேண்டர்வால் சமன்பாடு: உண்மை வளிகளின் நிலைபற்றிய சமன்பாடு.

(P+a/Vm2)(Vm-b)=RT

P- அழுத்தம். Vm- மோலார் பருமன்.T-வெப்ப இயக்க வெப்பநிலை. a,b- குறிப்பிட்ட பொருள் மாறிலிகள். R- வளி மாறிலி. (இய)

Van der Waals Force -வேண்டர் வால் விசை: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி விசை, வேண்டர்வால் (1837-1923) பெயரால் அமைந்தது. (இய)

vane - பரப்பு, தகடு: 1. பறவையின் உடலிறகுப் பரப்பு 2. வானிலைச் சேவல். காற்றுத் திசையைக் காட்டும் சுழலும் தகடு. (ப.து)

vapour -ஆவி: வளிநிலைப் பொருள்.பனியாகவும் புகையாகவும் இருக்கும். வெப்பநிலை மாறாமல் அழுத்தத்தை அதிகமாக்கி இதை நீர்மமாக்கலாம். (இய)

vapour density -ஆவி அடர்த்தி: ஒரே பருமனுள்ள அய்டிரஜன் பொருண்மைக்கும் குறிப்பிட்ட பருமனுள்ள பொருளின் பொருண்மைக்கும் உள்ள வீதம் ஒத்த வெப்பநிலையிலும் அழுத் தத்திலும் அளக்கப்படுவது. அய்டிரஜன் அடர்த்தியினை 1 என்று கொள்ள, வளியின் சார்பு மூலக்கூறு பொருண்மையின் பாதிக்கு இவ்வீதம் சமமாகும். (1 :1/2) (வேதி)

vapourisation -ஆவியாக்கல்: இது ஒரு முறை. இதில் நீர்மம் அல்லது திண்மம் வெப்பத்தினால் வளி அல்லது ஆவிநிலைக்கு மாற்றப் படுகிறது. பா. (இய)

vapour pressure -ஆவியழுத்தம்: நீர்மம் அல்லது திண்மத்தோடு சமநிலையிலிருக்கும் ஆவியின் அழுத்தம். (இய)

variety - மாறுவகை: துணைச் சிறப்பின மட்டத்திற்குக் கீழுள்ளது. பா. cultivar. (உயி)

vascular bundle -குழாய்த்திரள்: பா. Vascular system. (உயி)

vascular cambium -குழாய் அடுக்கியம்: குழாய் அடுக்குத்திசு. பா. intrafascicular cambium. (உயி)