பக்கம்:அறிவியல் அகராதி.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vol

461

wal


பகுப்பு: பண்பறி வேதிப்பகுப்பு முறைகளுள் ஒன்று. வினைபடு பொருள்களின் பருமன்களை அளத்தல், ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஒவ்வொரு பகுதியின் அளவை உறுதி செய்தல் ஆகிய செயல்கள் இதில் நடைபெறுகின்றன. (வேதி)

volumometer -பருமனறிமானி: ஒரு கெட்டிப் பொருளின் பருமனை, அது இடப்பெயர்ச்சி செய்யும் நீர்ம அளவைக் கொண்டு அளக்கப் பயன்படும் கருவி. (இய)

voluntary muscle -இயக்குத்தசை: பா. skeletal muscle. (உயி)

vomer- கலப்பை எலும்பு: 1. பல முதுகெலும்பிகளில் மண்டை ஓட்டு எலும்பு, 2. மனித மூக்குத் தடுப்பின் பகுதியாகவுள்ள ஆப்பு வடிவ எலும்பு, மெலிந்தும் தட்டையாகவும் உள்ளது. (உயி)

vortex - சுழல்: 1. ஒரு நீர்மத்தின் சுழல் இயக்கம். நீர்மையத்தில் குழி தோன்றும் நீர்ச்சுழல் 2. சுழற்காற்றுமையம். 3. அணுக்கள் அல்லது துகள்களின் சுழற்சி இயக்கம். (ப.து)

vulcanisation-வன்கந்தகமாக்கல்: ரப்பரின் பண்பை உயர்த்தும் முறை. இதில் கந்தகத்துடன் ரப்பர் சேர்த்துச் சூடாக்கப் படுகிறது. 1829இல் சார்லஸ் குட் இயர் என்னும அமெரிக்க அறிவியலார் இந்நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கண்டறிந்தார். (வேதி)

vulcanite -வல்கனைட்: பா.ebonite (வேதி)

vulcan power. -வன்கந்தக ஆற்றல்: அதிகம் வெடிக்குங் கலவை. இதில் 52.5% சோடியம் நைட்ரேட்டு, 30% நைட்ரோ கிளிசரின், 10.5% வீட்டுக்கரி, 7% கந்தகம் ஆகியவை சேர்ந்திருக்கும். (வேதி)

vulture - பிணம் தின்னும் கழுகு: கழுகு போன்றது. வெற்றுத்தலை சிறகுகள் 85 செ.மீ. வரை விரியும். இறந்த உடல்களைக் கொத்தித் தின்பது. (உயி)

vulva - பெண்குறி: பெண்ணின் புறப் பிறப்புறுப்புகள். (உயி)


W

walking aids -நடக்க உதவும் கருவிகள்: நுண் மின்னணுக் கருவிகள். உறுப்புக் குறைபாடு உடையவர்க்கு உதவியாக இருப்பவை. குருடர்க்கும் செவிடர்க்கும் இக்கருவிகள் உதவுவன. (தொழி) .

walking ferns -அரும்பு விடு பெரணிகள்: சில பெரணிகள் தங்கள் இலை முனையில் அரும்புகளை உண்டாக்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இலை வளைந்து முனை தரையைத் தொட்டதும், அது வேர்விட்டுப் புதிய தாவரமாக வளரும். இவ்வாறு உறுப்பு முறையில் இனப்பெருக்கம் செய்யும் பெரணிகள் வேர்விடு பெரணிகள்