பக்கம்:அறிவியல் அகராதி.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wat

463

Wat


water - நீர் ஒளி ஊடுருவக் கூடியது. நிறமற்றது. மணமற்றது. சுவையற்றது. கொ.நி. 100 °செ. உ.நி. 0 °செ. அனைத்துக் கரைப்பான். நீரின்றி அமையாது உலகு. பயன்கள் பல. (வேதி).

water bag - நீர்ப்பை: ஒட்டகத்தின் நீர்ப்பை. (உயி)

water barometer - நீர்ப்பளுமானி: இதில் பாதரசத்திற்குப் பதில், காற்றழுத்தத்தை அளக்க நீர் பயன்படுதல். (உயி)

water bugs - நீர்ப்பூச்சிகள்: குளங் குட்டைகளில் வாழ்பவை. பெரும்பான்மை பாசிகளையும் சில நீர்ப்பூச்சிகளின் இளம் உயிரிகளையும் உண்பவை. (உயி)

water gas - நீராவி வளி: எரி பொருள் வளி, கார்பன் மோனாக்சைடும் நீர் வளியும் சேர்ந்த கலவை. பழுத்த கல்கரியில் நீராவியைச் செலுத்த இவ்வளி கிடைக்கும். எரிபொருள். ஒ. producer gas. (வேதி)

water culture - நீர் வளர்ப்பு: தாவரங்களை நீரில் வளர்த்தல். பா. (உயி)

water holding capacity - நீர் கொள்திறன்: மண்நீரைத் தேக்கி வைக்கும் ஆற்றல். இது குறு மண்ணுக்கு அதிகம் (உயி)

water of crystallization - படிக(மாதல்) நீர்: பல படிகங்களில் வேதிமுறையில் நீர் சேர்ந்திருத்தல், வெப்பப்படுத்தல் மூலம் இதனை நீக்கலாம். படிகம் தன் பண்புகளை இழக்கும். (வேதி)

water pollution - நீரை மாசு படுத்துதல்: வேதிப்பொருள்கள், சாய்க்கடை நீர், கழுவுநீர் முதலியவை நீருடன் சேர்ந்து அதை மாசுபடுத்தல். இது வாழ்வு நலச்சிக்கல்களை உண்டாக்குவது. இதை உணர்த்தவே உலகத்துப் புரவு நாள் கொண்டாடப்படுகிறது. (உயி)

water potential - நீரழுத்தம்: தாவரத்திற்குத் தேவையான நீரின் ஆற்றல் அளவு. இஃது ஓர் அடிப்படை வெப்ப இயக்க விசையாகும். அதிக நீரழுத்தத்திலிருந்து குறைந்த நீரழுத்தத்திற்கு நீர் செல்வது. ஊடுபரவல், விறைப்பழுத்தம், மேற்பரப்பு விசை ஆகியவை இதற்கு உதவும் காரணிகள். (உயி)

water scorpion - நீர்த்தேள்: பூச்சி இன உயிரி. இரையுண்ணும் நீர்வாழி. முன்கால்கள் இரை பிடிக்கவும் பின் கால்கள் நடக்கவும், நீந்தவும் பயன்படுகின்றன. கடித்தால் வலி ஏற்படும். (உயி)

water stress - நீர் நெருக்கடி: வறட்சிநிலை. உயிர்ச்சூழலைப் பாதிப்பது, (உயி)

Watson-Crick model - வாட்சன் கிரிக் மாதிரி: டிஎன்ஏ வின் அமைப்பு மாதிரி. டிஎன்ஏ இரட்டைத் திருக்குச் சுருளில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட மாதிரி. அமெரிக்க உயிரியல் வேதிஇயலார் ஜேம்ஸ்