பக்கம்:அறிவியல் அகராதி.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wbo

465

Wes


வது. உயிரியைப் பாதுகாக்கப் பயன்படுவது. எ.டு, வெண்மெழுகு. வத்திகள் செய்யவும் கட்டு வேலையிலும் காலணித் தொழிலிலும் பயன்படுவது. பா. bees wax. (வேதி)

w bond - டபிள்யூ அலைவரிசை: நுண் அதிர்வெண் அலைவரிசை, 56-100 ஜைகாஹெர்ட்ஸ் எல்லை வரையுள்ளது. (இய)

WBC, white blood corpuscie - டபிள்யூ.சி. வெள்ளைக்குருதி அணுக்கள்: குருதியிலுள்ள வெள்ளணுக்கள். (உயி)

weather - வானிலை: காற்றுவெளி நிலைமை. கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது. (இய)

weather forecasting - வானிலை முன்னறிவிப்பு: அன்றாடம் வானிலை நிலையம் திரட்டும் வானிலைச் செய்திகளின் அடிப்படையில் அடுத்த நாள் வானிலை எவ்வாறு இருக்கும் என்று முன் கூட்டித் தெரிவித்தல், வானிலைச் செய்திகளை உலக அளவில் திரட்டச் செயற்கை நிலாக்கள் பேருதவி புரிகின்றன. (இய)

web - 1. விரலிடைத்தோல்: சில விலங்குகளின் விரல்களை இணைக்கும் மெல்லிய படலம். நீரில் நீந்தத் துடுப்புபோல் உதவுவது. எ-டு வாத்து, தவளை. (உயி) 2. இடையம்: இணையம் ஒ. net, internet

web page - இடையப்பக்கம்.

website - இடையத்தளம்: இணையவரி, மின்தளம்

weed - களை: தேவையில்லாத தாவரம், களைக்கொல்லி மூலம் போக்கலாம். வயல்களிலும் புஞ்சைப்பயிர்களிலும் களை எடுத்தல் இயற்கை முறையாகும். (உயி)

weevil - அந்துப்பூச்சி: 3000 வகைகள். அலகாகத் தலை நீண்டுள்ளது. அலகிலிருந்து உணரிகள் கிளம்புபவை. அலகின் முனையில் அசையும் வாய்ப்பகுதிகள் உண்டு. இலைகள் பூக்கள், தானியங்கள் முதலியவற்றை அழிப்பது. (உயி) weight - எடை: ஒரு பொருளின் மீது ஏற்படும் புவி ஈர்ப்புவிசையின் அளவு. இடத்திற்கிடம் மாறுபடுவது. காரணம் புவிஈர்ப்பு விசையின் அளவு மாறுவதே. ஒ, mass, weightlessness. (இய)

weightlessness - எடையின்மை: வானவெளி நிலைமை. எடையே இல்லாத நிலைமை, வாணவெளி யில் உண்டாவது. உடல் மிதக்கும். இதனைச் சுழி ஈர்ப்பு நிலைமை என்றும் கூறலாம். வானவெளி வீரர்கள் உணர்வது. வானவெளி உயிரியலில் ஒரு நோயாகக் கருதப்படுவது. பா. Zero gravity. ஒ. Weight (இய)

Weston cell, Cadmium cell - வெஸ்டன் மின்கலம், காட்மியம்