பக்கம்:அறிவியல் அகராதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bas

45

bea


நோக்கி அமைதல். காட்டாக, முன்தோன்று மரத்திசு, பின்தோன்று மரத்திசு ஆகியவற்றின் தோற்றத்திசை நுனியிலிருந்து கீழ்நோக்கி அமையும். தண்டில் வளர்ப்பிப் போக்குவரவு பொதுவாக அடி நோக்கியே அமையும். ஒ.acropetal.

bass - படுகுரல்: 250 ஹெர்ட்ஸ் களுக்குக் கீழுள்ள கேள் எல்லைத் தாழ் முனையில் உண்டாகும் அதிர்வெண்கள். இசையின் ஒரு பகுதி. இதனைப் படுத்தலோசை எனலாம். (இய)

bast - பட்டைத்திசு: பா. phloem. (உயி)

bats - வெளவால்கள்: பறக்கும் பாலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. (உயி)

battery - மின்கல அடுக்கு: மின்கலத் தொகுதி. இதில் முதல் மின்கலங்கள், சேமிப்பு மின்கலங்கள் அல்லது மின் இயக்கிகள் இருக்கும். நேர் மின்னோட்டத்தை அளிப்பது. ஆய்வகங்களிலும் உந்து வண்டிகளிலும் பயன்படுவது. இதனைப் பக்கவரிசையிலும் தொடர்வரிசையிலும் இணைத்து மின்சாரத்தை பெறலாம். (இய)

battery capacity - மின்கல அடுக்குத்திறன்: இந்த அடுக்கின் உழைக்கும் ஆற்றலும் மின்சாரம் தரும் ஆற்றலும் அதன் திறனைக் குறிக்கும். இஃது இத்தனை ஆம்பியர் என்று கூறப்பெறும். காட்டாகத் திறன் 10 ஆம்பியர் மணி என்றால் ஒர் ஆம்பியர் மின்னோட்டத்தை 10 மணி நேரத்திற்குப் பெறலாம் என்பது பொருள். (இய)

battery charge - மின்கலஅடுக்கு மின்னேற்றம் (இய)

battery discharge - மின்கலஅடுக்கு மின்னிறக்கம். (இய)

battery, storage - சேமக்கலன் அடுக்கு: இது துணைமின்கலமே. இதில் மின்னாற்றல் வேதியாற்றலாக மாற்றப்பட்டுச் சேமித்து வைக்கப் படுகிறது. இச்சேமிப்பால் இதற்கு அப்பெயர் வரலாயிற்று. (இய)

bauxite - பாக்சைட்: கூடுதல் நீர் மூலக்கூறுகள் உள்ள அலுமினியத் தாது. இக்கரைசலை மின்னாற் பகுக்க அலுமினியம் கிடைக்கும். (வேதி)

beam - 1. கற்றை: ஒழுங்காகச் செல்லும் கதிர்த் தொகுதி. துகள்களாலானது. எ-டு. மின்னணுக் கற்றை, ரேடார்க் கற்றை. 2. கோல்: தராசின் கோல். (இய)

beam compass - கோல் கவராயம்: ஒரு சட்டம் அல்லது கோலை மையமாகக் கொண்ட கருவி. இதில் சரி செய்யும் புள்ளிகள் இருக்கும். தொழில் நுட்ப நிறுவனங்களில் பெருவட்டம் வரையப் பயன்படுவது. (உயி)

bearing - திசைக் கோணம்: திசைக் காட்டியால் காட்டப் படும் கோணம். 90° திசைக் கோணம் என்பது கிழக்கு. 180°