பக்கம்:அறிவியல் அகராதி.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xys

473

yea


மையான வேலைகள். முன் வளரியத்திலிருந்து வேறுபாடடைதல் மூலம் முதல் மரவியம் உண்டாகிற்து. இதில் முன் மரவியம், பின் மரவியம் ஆகிய இருபகுதிகள் உண்டு. வளரியத்தினால் உண்டாவது இரண்டாம் மரவியம். இது கூடுதல் மரவியமாகும். பொதுவாக, மரவியத்தில் குழாய்கள், நாரிழைகள், பஞ்சுத்திசு அணுக்கள் ஆகியவை இருக்கும். (உயி)

xyster-எலும்புச்சுரண்டி: எலும்புகளைச் சுரண்டும் கருவி (உயி)

Y

yagi aerial -யாகி அலைவாங்கி: கதிரியத் தொலைநோக்கிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் பயன்படும் திசைசார் அலை வாங்கித் தொடர் (இய)

yak-யாக்கு: திபேத்து எருது வகை உடல் முழுதும் நீண்டதும் தடித்ததுமான பட்டு போன்ற மயிர் உண்டு. (உயி)

yam - காச்சைக்கிழங்கு: ஒற்றை விதையிலை கொண்ட ஏறும் தாவரம். வளரும் உயரம் 18 மீ. தண்டு நாற்கோண வடிவ முள்ளது. இலைகளில் 5 நரம்புகள் உண்டு. இதன் கிழங்கு ஊட்டமில்லாதது. உண்ணக் கூடியது. (உயி)

yawning - கொட்டாவி விடுதல்: இது நீண்டும் ஆழ்ந்தும் நடைபெறும் உள்மூச்சு, இதில் வாய் முழு அளவுக்கு திறந்திருக்கும். தளர்ச்சி,சோம்பல்,போதிய காற்று இல்லாமை ஆகியவற்றால் இஃது ஏற்படுகிறது. (உயி)

y-chromosome-ஒய் நிறப்புரி: இது பால் நிறப்புரியாகும். வேறுபட்ட பாலில் மட்டும் காணப்படுவது. அதாவது ஆண்களில் மட்டும் தெரிவது.எக்ஸ் நிறப் புரியிலிருந்து வேறுபடுவது. அடிக்கடி அதன் சிறிய குறுகிய பகுதி மட்டுமே குன்றல் பிரிவில் எக்ஸ் நிறப்புரியோடு சேர்தல். வழக்கமாக, அது சில மரபணுக் களையே கொண்டது. இரு வகைப் பால் நிறப்புரிகளில் சிறியது. (உயி)

year - ஆண்டு: கதிரவனை ஒரு தடவை சுற்றிவரப் புவி எடுத்துக் கொள்ளும நேரம், கதிரவன் ஆண்டு 365 நாட்கள். நாட்காட்டி ஆண்டு என்பது கதிரவன் ஆண்டை ஒட்டி ஒழுங்குபடுத் தப்படுவது. அதற்குச் சமமானது. விண்மீன் ஆண்டு. நிலையான விண்மீன்களைக் கொண்டு அளக்கப்படுவது, திங்களாண்டு என்பது 12 திங்களுக்குரியது. கதிரவன் ஆண்டு 365.242 19 சராசரி கதிரவன் நாட்கள். விண்மீன் ஆண்டு 365.256 36 சராசரி கதிரவன் நாட்கள். திங்கள் ஆண்டு 3653671 சராசரி கதிரவன் நாட்கள். (வானி)

yeast-ஈஸ்ட்டு: சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஓரணுப் பூஞ்சை சர்க்கரைக் கரைசலை