பக்கம்:அறிவியல் அகராதி.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

yel

474

zeb


நொதிக்க வைத்து ஈத்தைல் ஆல்ககாலையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுப்பது. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுதல். அரும்புதல் முலம் இனப் பெருக்கம், புரதம், உயிரியன் ஆகியவற்றின் ஊற்று. (உயி)

yellowing - மஞ்சளாதல்: பா.chlorosis.(உயி)

yellows - மஞ்சள்நோய்: கனிம ஊட்டக்குறைவினாலோ நச்சியத்தினாலோ உண்டாகும் தாவர நோய். (உயி)

yolk - ஊட்டக்கரு: கருவிலுள்ள ஊட்டமளிக்கும் பொருள். புரதமும் கொழுப்பும் நிறைந்தது. (உயி)

yolk cleavage -ஊட்டக்கரு பிளவிப் பெருகுதல்: ஒன்று அல்லது பல பிளவு உட்கருக் களைக் கொண்ட தொகுதிகளாக ஊட்டக்கரு பிரிதல். (உயி)

yolk gland-ஊட்டச்சுரப்பி: ஊட்டக்கரு உண்டாக்குவது (உயி)

yolk plug -ஊட்டச் செருகி: உறுப்பு முனை (முட்டை முனை) யிலுள்ள ஊட்டக்கரு பதிந்த சில கண்ணறை (செல்) களால் தோற்றுவிக்கப்படுவது. இரு படைக் கோளத்திலுள்ள கருக் கோளத்துளை வழியாக நீட்டிக் கொண்டிருப்பது, எ-டு தவளை. (உயி)

yolksac-ஊட்டப்பை: பையமைப்புள்ள கூடுதல் கருப்படலம். முட்டையின் முழுக்கருவையும் மூடுதல். பறவை, ஊர்வன முதலி யவற்றின் முட்டைகளில் காணப் படுவது. (உயி)

yolk stalk-ஊட்டக்காம்பு: கருப்பையினைக் கருக்குடலோடு இணைப்பது. பறவை, ஊர்வன முதலியவற்றின் முட்டைகளில் அமைந்திருப்பது (உயி)

Young's modulus-யங் எண்: யங் குணகம். ஒரு பொருளின் தகை விற்கும் அதனால் உண்டாக்கப் படும் திரிபிற்குமுள்ள வீதம். இது நீட்சி எண் ஆகும். இங்கிலாந்து இயற்பியலார் தாமஸ் யங்கின் (1773-1829) பெயரால் அமைந்தது. (இய)

ytterbium -எட்டர்பியம்: Yb, வெள்ளி போன்ற உலோகம் மென்மையானது. அரிய புவித் தனிம வரிசையைச் சார்ந்தது. எஃகின் பண்பை உயர்த்தப் பயன்படுதல். (வேதி)

yttrium -எட்டிரியம்: Y வெண்ணிற உலோகம். மாறுநிலைத் தனிம வரிசையைச் சார்ந்தது. உலோகக் கலவைகள் செய்ய.(வேதி)

Z

zebra - வரிக்குதிரை: குதிரை போன்ற விலங்கு, ஆப்பிரிக்காவைச் சார்ந்தது. கறுப்பு வரிகளும் வெள்ளை வரிகளும் உடலில் மாறி மாறி இருப்பதால் இப்