பக்கம்:அறிவியல் அகராதி.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zie

476

zod


மினியம் ஆல்கைல்கள். ஜெர்மன் வேதி இயலார் கார்ள் சீக்ளர் (1898-1973) என்பவரால் 1953இல் அறிமுகப்படுத்தப்பட்டது. (வேதி)

Ziesel reaction -சீசல் வினை: ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள முத்தாக்சைல் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் முறை. 1886இல் சீசெல் என்பவரால் உருவாக்கப்பெற்றது. (வேதி)

zinc துத்தநாகம்: Zn. கடின உலோகம். நீலமும் வெண்மையும் கலந்தது. வெண்கலம் செய்யவும் இரும்புத்தகடுகளுக்கு நாக முலாம் பூசவும் பயன்படுவது. (வேதி)

zinc blende-துத்தக் குளோரைடு: ZnS. துத்தநாகத்தின் முதன்மையான தாது (வேதி).

zinc carbonate -துத்தக் கார்பனேட்டு: ZnCO3 மென்மையான வெண்ணிறத்தூள், நீரில் கரையாதது. இயற்கையில் காலமைனாகக் கிடைப்பது காலமைன் கரைசலில் பயன்படுவது. தோல் நோய்களுக்கு மருந்து. (வேதி),

zinc chloride -துத்தக் குளோரைடு: ZnCl2 வெண்ணிறப் பொருள். அதிகம் நீர் ஈர்க்கக் கூடியது. அதிகம் நீரில் கரைந்து காடிக் கரைசலைக் கொடுப்பது. நீர் நீக்கும் பொருள். மரப்பாதுகாப்புப் பொருள். துத்தநாக ஆக்சைடுடன் சேர்ந்த பசை. பற்காரையாகப் பயன்படுவது. (வேதி)

zinc oxide -துத்தாக்சைடு: ZnO, வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான புரை எதிர்ப்பியாகவும் பயன்படுதல். பழைய பெயர் மெய்யறிவாளர் கம்பளம். (வேதி)

zinc sulphate-துத்தச் சல்பேட்டு: ZnSO4 வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது. சீரான வெப்பநிலையில் காற்றில் சல்பைடு தாதுவை வறுத்துப் பெறப்படுவது. மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது. (வேதி)

zirconium -சிர்கோனியம்: Zr. அரிய உலோகம். மென்மையானது. பளபளப்பானது. தகடாக்கலாம். எஃகுத் தோற்றமுடையது. உலோகக் கலவைகள் செய்யவும் தீச்சுடர்த்தடைச் சேர்மங்கள் செய்யவும் பயன்படுவது. (வேதி),

zirconium silicate -சிர்கோனியம் சிலிகேட்டு: ZrSiO4 நிறமற்றது. அல்லது சிறிது மஞ்சள் நிறமுடையது. நீரில் கரையாப் பொருள். வெள்ளையாக இருப்பின் மணிக்கல், நிறமாக இருப்பின் உருகாப் பொருள். (வேதி)

Zodiac உருவட்டம்: வானத்திலுள்ள கற்பனை வளையம், 18°