பக்கம்:அறிவியல் அகராதி.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zod

477

zyg


அகலமுள்ளது. இதன்வழியே பெருவட்டம் (எக்ளிப்டிக்) மையமாகச் செல்கிறது. இவ்வட்டமே கதிரவன், திங்கள், கோள்கள் ஆகியவற்றின் இயக்கங்களுக்குப் பின்னணியாக அமைவது. இவ்வளையம் 30° உள்ள 12 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை உருவட்டக் குறிகள் (சைன்ஸ் ஆஃப் தி சூடியாக்) எனப்படும். சோதிடத்தில் இப்பகுதி இராசிகள் என்று கூறப் பெறும், அவையாவன: 1. மேஷம் (செம்மறியாடு) 2. ரிஷபம் (எருது) 3. மிதுனம் இரட்டையர்) 4. கடகம் (நண்டு) 5. சிம்மம் (அரிமா) 6. கன்னி (இளம்பெண்) 7. துலாம் (ஆரை) 8. விருச்சிகம் (தேள்) 9. தனுசு (வில்) 10. மகரம் (வெள்ளாடு) 11. கும்பம் (குடம்) 12. மீனம் (மீன்) (வானி)

zodiacal light - உருவட்ட ஒளி: வானத்தின் மங்கலான ஒளிர்வு. இரட்டைக் குவி வடிவத்தில் இருக்கும். கதிரவனின் இருபக்கத்திலுமுள்ள பெருவட்டத் திசை யில் நீண்டிருக்கும். அவ்வட்டத்திலிருந்து 90° அளவில் மங்கலாகிச் செல்லும். கதிரவன் தோன்றுவதற்கு முன்போ பின்போ வெப்ப மண்டலங்களில் பார்க்கலாம். (வானி)

Zone refining-மண்டலத் தூய்மையாக்கல்: சில உலோகங்கள், உலோகக் கலவைகள், அரைகுறைக் கடத்திகள் முதலியவற்றிலுள்ள மாசுகளின் அளவைக் குறைக்கப் பயன்படும் நுணுக்கம். (வேதி)

zoologist-விலங்கியலார்: விலங்குகளை ஆராய்பவர். (உயி)

zoom lens-சூம் (லென்ஸ்) வில்லை: திரைப்பட ஒளிப்பெட்டியில் பயன்படும் வில்லைத் தொகுப்பு. ஒரே உருத்தலத்தில் உரு இருக்கக் குவிய நீளம் தொடர்ச்சியாகவும் குவிய இழப்பு இல்லாமலும் சரி செய்யப்படுதல். (இய)

zoo - விலங்ககம்: விலங்குகள் காட்சிக்காக வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுமிடம். (உயி)

zoology - விலங்கியல்: விலங்குகளை ஆராயும் துறை. உயிரியலின் ஒரு பிரிவு. இது மேலும் பல பிரிவுகளைக் கொண்டது. (உயி)

zootaxy - விலங்கு வகைப் பாட்டியல்: விலங்குகளை வகைப்படுத்தும் அறிவியல். (உயி)

Zwitterion -ஈரயனி: இரு முனை அயனி. நேர் மின்னேற்றமும் எதிர் மின்னேற்றமும் கொண்டது. (உயி)

zygantrum - குழி எலும்பு: பல்லி, பாம்பு முதலிய விலங்குகளில் முன் வளைவான பின்பகுதியில் காணப்படும் ஓரிணைக் கூடுதல் முள் எலும்பு. (உயி)