பக்கம்:அறிவியல் அகராதி.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zyg

478

zym


zygodactyl-இருகூறு விரலுள்ள: பறவையின் கால் இருவிரல்களைக் கொண்டிருப்பது.ஒன்று முன்னோக்கியும் மற்றொன்று பின்னோக்கியும் இருத்தல். இந்த அமைப்பு பிடிப்பிற்குப் பயன்படுவது. (உயி)

zygoma - கன்ன எலும்பு: முகஎலும்புகளில் ஒன்று. (உயி)

zygote-கருவணு: முட்டையும் சிதலும் சேர்வதால் உண்டாகும் அணு (உயி)

zygotene - இணைநிலை: குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்தமாகும். (உயி)

Zymology -நொதித்தலியல்: நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை. (வேதி)

zymometer -நொதிமானி: நொதித்தல் அளவை அளக்கப் பயன்படும் கருவி. (வேதி)

zymurgy - தொழில்நுட்ப வேதியியல்: நொதித்தல் தொடர்பான சாராயங் காய்ச்சுதல், வடித்தல் முதலிய செயல்களை ஆராயும் துறை. (வேதி)


புதுப் பதிவுகள்

anaphase -பின்னிலை: உயிரணுவின் இழைப்பிரிவில் மூன்றாம் நிலை. (உயி)

animatronics -எழுச்சிமிகு மின்னணுத் தொலை இயல் : இச்சொல் animation, electronics, robotics ஆகிய மூன்று சொற்களின் தொகுப்பு. தவிர, இது ஒரு தொகுப்புத் தொழில்நுட்பம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களிலும் கற்பனை உண்மையைக் காட்டுவது. மிகப்புதிய அறிவியல் துறை (17-10-2000) (தொ.நு).

aril - பத்திரி: விதைப்புற வளர்ச்சி. (உயி).

blood bank -குருதி வங்கி: குருதியைச் சேமித்து வைத்து வேண்டிய பொழுது பயன்படுத்துவது.ஒ. fransfusion. (மரு)

broadcasting -ஒலிபரப்பு: நிகழ்ச்சிகளை வானொலி அலைகள் வாயிலாகப் பரப்புதல், ஒ. telecast, network programme (தொ.நு).

business netiquette - இணைய இணக்க நடத்தை: இணையத்தைக் கையாளும் பொழுது, தொழில் செய்பவர்களும் தொழில் அமைப்புகளும் மேற்கொள்ளும் சமூக இணக்கமுள்ளதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தகுதியுள்ளதுமான வணிக நடத்தை (20-11-2000) (தொ.நு).