பக்கம்:அறிவியல் அகராதி.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

479


chromatid - நிறணி: நிறப்புரி பிரியும் பொழுது உண்டாகும் இழை போன்ற பொருள். பா. chromatin. (உயி)

collateral bundle - இருகுத் திரள்: தாவரக் குழாய்த்திசுத் தொகுதியிலுள்ளது. இது மூடிய திரள், ஈரடுக்குத் திரள், திறந்த அடுக்குத் திரள் எனப் பல வகை. (உயி)

coordinate = ஆயத்தொலை: அச்சுத்தொலை (கணி).

crustacea - ஓட்டு விலங்குகள்: நண்டு முதலியவை. (உயி)

cyber crime - கணிணிக் குற்றம்: கணிப்பொறித் தொடர்பாகச் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறுவது. (தொ.நு.)

diarch xylem - இரட்டைப் புரி மரத்திசு: இரு இழைகள் உள்ளது. ஒ. exarch (உயி)

distal end - சேய்மை முனை: தொலைமுனை ஒ. proximal end. (உயி)

divergent evolution - விரி உயிர் மலர்ச்சி: பரிணாமத்தில் ஒரு வகை. ஒ. convergent evolution (உயி)

earthworm -மண்புழு: நாங்கூழ்ப்புழு (உயி)

empirical formula - வீத வாய்பாடு: தகவு வாய்பாடு (வேதி).

endarch xylem - உள்முனை மரத்திசு: உள் முனையில் முன் மரத்திசு அமைதல். (உயி)

exarch xylem - புறமுனை மரத்திசு: மரத்திசு வெளிப் புற முனையில் முன் மரத்திசு இருத்தல். (உயி)

fascicular cambium - பட்டை வளர்திசு: வளர்திசுவின் தட்டைப்புரி, குழாய்த் திரளில் மரத்திசுவிற்கும் பட்டைத் திசுவிற்கும் இடையில் உள்ளது. பா. xylem, phloem (உயி)

girdle - வளையம்: இது தோள் வளையம், இடுப்பு வளையம் என இருவகை. (உயி)

heteromerous - வேறெண்ணிக்கையுள்ள: பூவட்டத்தில் வேறுபட்ட எண்ணிக்கையில் பகுதிகள் அமைந்திருத்தல். (உயி)

homoimerous - ஒத்த எண்ணிக்கையுள்ள: பூ வட்டத்தில் ஒத்த எண்ணிக்கையில் பகுதிகள் அமைந்திருத்தல். (உயி)

kinetic energy - இயக்க ஆற்றல்: ஆற்றலின் ஒருவகை ஒ. potential energy. (இய)

labellum - உதட்டிதழ்: தும்பி, தேனீ முதலியவற்றில் காணப்படும் உறுப்பு. (உயி)

metaphase - நடுநிலை: உயிரணுவின் இழைப் பிரிவில் இரண்டாம் நிலை. (உயி)

M. Commerce - நடமாடும் வணிகம்: mobile commerce. கைத்தொலைபேசி, இருவழி வானொலி ஆகியவை மூலம் நடைபெறுந் தொழில். பா. teleconferencing, teleshopping. (தொ. நு.)

nutraceuticals - ஊட்ட மருந்துகள்: இச்சொல் nutrition, pharmaceuticals ஆகிய இரு சொற்களின் தொகுப்பு உணவுப் பிழிவுகளைத் தடுப்பு மருந்துகளாகவோ துணை உணவுப் பொருள்களாகவோ பயன்படுத்தலாம் என்பது இச்சொல்லின் பொருள். வருங்கால உணவுக் கலையில் உணவுகளாக, அதாவது ஆற்றல் தரும் உணவுகளாக அமைபவை. உணவுத் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியை உண்டாக்க இருப்பவை.(நவம்பர் 2000) (தொ.நு.)