பக்கம்:அறிவியல் அகராதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bil

49

boo


bile - பித்த நீர்: கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு. (உயி)

bile duct - பித்த நீர்நாளம்: பித்த நீர் செல்லும் குழாய். (உயி)

bimetallic strip - இரு உலோகப் பட்டை: இரு உலோகங்கள் பக்கவாட்டில் சேர்ந்த சட்டம் தீ எச்சரிக்கை செய்யும் கருவிகளில் பயன்படுதல். (இய)

binary code - இரு நிலைக் குறித்தொகுதி: இருமக் குறித் தொகுதி இருநிலை இலக்கங்களின் தொகுதிகளாக எண்கள் தெரிவிக்கப்படும். இவை கணிப்பொறியில் பயன்படுத்தப்படுபவை. (இய)

binary compound - இருமத்தனிமச் சேர்மம்: இரண்டு தனிமங்களிலிருந்து உண்டாகும் சேர்மம். சோடியம் குளோரைடு. (வேதி)

binary digit - இரு நிலை இலக்கம்: இரும இலக்கம். கணிப் பொறியின் அடிப்படை 0 அல்லது 1. இருநிலை எண் முறையில் ஒர் எண்ணைத் தெரிவிக்கப் பயன்படுவது. எ-டு. 0110 பா. bit (இய)

binaryfission - இரட்டைப் பிளவு: ஒர் உயிரியின் பாலில்லா இனப்பெருக்கம். இதில் ஒத்த ஆனால் சிறிய சேய் உயிரிகள் உண்டாதல், குச்சியங்கள். (உயி)

binary number - இரும நிலை எண்: எண் முறையில் இரண்டின் அடிமானத்தைக் கொண்ட எண். எ-டு. 1011 (இய)

binary stars - இரட்டை விண் மீன்கள்: ஒரு திரட்சியின் பொதுமையத்தை வலம் வரும் இரு விண் மீன்கள். (வானி)

binocular - இரு கண் நோக்கி: ஒரே சமயத்தில் இரு கண்களாலும் பார்க்கக் கூடிய கருவி. இது இரு தொலை நோக்கிகளைக் கொண்டது. (இய)

binomial nomenclature - இரு பெயரிடல்: உயிரிகளுக்கு இரு பெயரிட்டு அழைக்கும் முறை. இது 1735இல் ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலார் காரோலஸ் லின்னேயஸ் என்பவரால் உருவாக் கப்பட்டு நீக்கமற நிலைத்திருப்பது. ஒவ்வொரு உயிருக்கும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பேரினப்பெயர். மற்றொன்று சிறப்பினைப் பெயர். எ-டு. அய்பிஸ்கஸ் ரோசாசினன்சிஸ் (செம்பருத்தி). இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது, சிறப்பினப் பெயர். (உயி)

bioassay - உயிரிக் கணிப்பு: அளவு முறையில் உயிரிய ஊக்கிகளை மதிப்பிடுவது. எ-டு. ஆஸ்ட்ரஜன் மதிப்பீடு. (உயி)

biochemistry - உயிரி வேதி இயல்: உயிரிகளின் வேதிச் செயல்களையும் வேதிப்பொருள்களையும் ஆராயுந்துறை. (உயி)

biochemical taxonomy - உயிரி வேதி வகைப்பாட்டியல்: உயிரி வேதிப் பண்புகள் அடிப்படையில் பாகுபாடு செய்தல். மரப்பால் அடிப்படையில் தாவரக்

அ.அ 4