பக்கம்:அறிவியல் அகராதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bio

53

bit


வெப்பநிலைப்புடைய துணை நொதி, வைட்டமின் பி தொகுதியில் ஒன்று. இதன் பெயர் வைட்டமின் எச். (உயி)

biotype - உயிர் வகை: ஒரே மரபணு இயைபுடைய தனி உயிர்கள் இயற்கையான தொகுதியாக அமைந்திருத்தல். எ-டு. பால் தொகுதி (குளோன்) ஒ. ecotype. (உயி)

bipinnaria - இரட்டை இறகிளிரி: நட்சத்திர மீனுக்குரிய இரு மருங்கிளரி. ஒ. pluteus. பா. dipleurula. (உயி)

biramous appendage - இரு கிளை உறுப்பு: நண்டு முதலிய ஒட்டுடலிகளில் காணப்படும் உறுப்பு. பா. phyllopodium, stenopodium. (உயி)

birth control - பிறப்புக் கட்டுப்பாடு: தடைக் கருவிகள் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல். இதனால் பிறப்பு வீதம் குறையும். பா. family planning. (உயி)

bisexual - இருபால்: ஆண், பெண் ஆகிய இருபால் இனக் கண்ணறைகளையும் தோற்றுவிக்கும் தன்மை. எ-டு. மண்புழு, பூவரசு. (உயி)

bismuth - பிஸ்மத்: Bi வெள்ளி நிற உலோகம். செந்நிறம். நொறுங்கக்கூடியது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்துவது. உலோகக் கலவைகளில் பயன்படுவது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒப்பனைப் பொருள்களிலும் மருந்துகளிலும் பயன்படுபவை. (வேதி)

bit - பிட்: அலகுச் சொல், பைனரி டிஜிட் என்பதன் சுருக்கம். இரு நிலை இலக்கம் (0,1), கணிப்பொறியிலும் ஏனைய எண் முறைகளிலும் செய்திகளின் அடிப்படை அலகு. ஒர் எழுத்தை, 1 பைட் இடத்தில்தான் பதிவு செய்ய இயலும். எட்டுப் பிட்டுகள் கொண்டது ஒரு பைட் 1024 பைட் ஒரு கிலோ பைட். பா. byte. (உயி)

bitumen - நீலக்கீல்: எரியக்கூடிய பல கனிமப் பொருள்களைக் கொண்டது. அவையாவன. அஸ்பால்ட், நாப்தா, பெட்ரோலியம். (வேதி)

biuret test - பையூரட் ஆய்வு: புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட் துளித்துளியாகக் கலக்கப்படுகிறது. தோன்றும் ஊதாநிறம் புரதமிருப்பதைக் காட்டுகிறது. (வேதி)

black body - கரும்பொருள்: எல்லாப் படுகதிர் வீச்சுகளையும் உறிஞ்சும் பொருள். கரும் பொருளிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வெளியேறும் கதிர்வீச்சாற்றலுக்கு கரும் பொருள் கதிர்வீச்சு என்று பெயர். (இய)

black hole - கருந்துளை: இடக்