பக்கம்:அறிவியல் அகராதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bla

54

ble


காலப்பகுதி, இதிலிருந்து பொருளோ ஆற்றலோ தப்பமுடியாது. இது ஒரு விண்மீனாக இருக்கலாம். இங்கு விடுபடு விரைவு ஒளியின் விரைவை விட மிகுதி. கருந்துளைகள் தோற்ற மீன்களின் ஆற்றல் ஊற்றுகளாகக் கருதப்படுபவை. (வான)

black light - கருவொளி: ஒளிர் பொருள்களில் விழும் புற ஊதாக்கதிர்கள் தென்படா ஒளியாகும். இப்பொருள்கள் மீண்டும் ஒளியை உண்டாக்கும். (இய)

Blackman reaction - பிளாக்மன் வினை: ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் இருட்செயல். ஒளிச்செயலைத் தொடர்ந்து வருவது. நீரின் அய்டிரஜனால் கரி ஈராக்சைடு ஒடுங்குகிறது, சர்கரையாகிறது. Hill reaction.(உயி )

bladder - பை: உட்குழிவான தசையுறுப்பு. இது காற்றுப்பை, பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை எனப் பலவகைப்படும். (உயி)

blast furnace - ஊதுலை: இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் உலை. (வேதி)

blastocyst - கருங்கோனியம்: பதிவதற்கு முன் பிளவிப் பெருகலின் பிந்திய நிலைகளில் உள்ள பாலூட்டி முட்டை. நீர் நிரம்பிய உட்குழிவான அணுக்கோளத் தாலானது. இதிலிருந்து கருவளர்கிறது. பா. blastula, trophoblast. (உயி)

blasto-genesis - கருக்கோளத் தோற்றம்: கருக்கோளவாக்கம். மரபு வழிப் பண்புகள் இனக்கணியத்தின் வழியாகச் செல்வதற்குக் கருக்கோளத் தோற்றம் என்று பெயர். 2. அரும்புதல். அரும்புகள் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம். (உயி)

blastotomy - கருக்கோளப்பிரிவு: கருக்கோளக் கண்ணறைகள் பிரிதல். பா. gastrula (உயி)

blastula - கருக்கோளம்: கருவுற்ற முட்டை பிளவிப் பெருகுதலால் உண்டாகும் கோளவடிவ வளர்நிலை. (உயி)

bleaching agents - வெளுப்பிகள்: நிறம் நீக்க அல்லது வெளுக்கப் பயன்படும் வேதிப் பொருள்கள். குளோரின், கந்தக ஈராக்சைடு. (வேதி)

bleaching powder - வெளுக்குத்தூள், சலவைத்தூள்: CaOCl2, கால்சியம் அய்டிராக்சைடுடன் குளோரினைச் சேர்க்க இத்துள் கிடைக்கும். நீரிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லப் பயன்படுதல். (வேதி)

bleeder - 1. குருதிக் கசிவோர்:குருதி உறையாமை நோயினால் (ஈமோபிலியா) வருந்துபவர். அடிக்கடி குருதிக் கசிவுக்குட்படுபவர். (உயி) 2. மின் தடை: குறிப்பிட்ட வீதத்தில் மின்சாரத்தை எடுக்கப் பயன்படுவது. (இய)

blende - பிளண்ட்: இயற்கையில் கிடைக்கும். உலோகச் சல்பைடு தாது. எ-டு. துத்த நாகப்பிளண்ட். (வேதி)