பக்கம்:அறிவியல் அகராதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bon

57

bot


றினாலானது. எலும்பிழைப்படலத்தால் (பெரியாஸ்டியம்) போர்த்தப்பட்டிருக்கும். உடலுக்கு உரத்தையும் வடிவத்தையும் அளிப்பது. (உயி)

bone ash - எலும்பு சாம்பல்:எலும்பை எரிக்க உண்டாவது. (வேதி)

bonsai trees - குருளை மரங்கள்: தொட்டியில் வளர்க்கப்படும் சிறிய தாவரங்கள். இக்கலையில் ஜப்பானியர்கள் வல்லவர்கள். (உயி)

Boolean algebra - பூலின் இயற்கை கணிதம்: 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் பூல் என்னும் கணித மேதையால் உருவாக்கப்பட்டது. மெய் அல்லது பொய்யான முறைமை ஆணைகளைச் சுருக்கெழுத்தில் கணிப்பொறியில் அமைக்கும் முறை. (இய)

borate - பொரேட்: போரிகக்காடி உப்பு.(வேதி)

borax - வெண்காரம்: Na2B4O710H2O. வார்ப்புரு:S Na2[B4O5(OH)4.8H2O. பொரானின் முதன்மையான தாது. மஞ்சளும் நீலமும் சாம்பல் நிறமும் சேர்ந்த கனிமம். வெண்ணிறப் படிகம். நச்சுத் தடையாகவும் துப்புரவுப் பொருளாகவும் பயன்படுவது. (வேதி)

bordeaux mixture - போர்டோ கலவை: செம்புச் சல்பேட்டும் கால்சியம் ஆக்சைடும் நீரில் சேர்ந்த கலவை. பூச்சிக் கொல்லி. (வேதி)

boredom - சலிப்பு: அலுப்பு தட்டும் நிலை. இதன் விளைவுகள் சோர்வில் தோன்றும் விளைவுகளை ஒத்தவை. (உயி)

boricacid - போரிகக் காடி: H3BO3 தொடுவதற்குச் சவர்க்காரம் போன்று மென்மையாக இருக்கும் வெண்ணிறப்படிகம். மித நச்சுத் தடையாகும். மெருகுப் பொருள் செய்வதில் பயன்படுவது. (வேதி)

boron - பொரான்: B. அலோக மஞ்சள் நிறப் படிகம். போரிகக் காடியாகவும் வெண்காரமாகவும் உள்ளது. இரும்பை வார்ப்பதிலும் எஃகைக் கடினப்படுத்துவதிலும் பயன்படுவது. (வேதி)

boron carbide - பொரான் கார்பைடு: B4C மிகக் கடியதும் கரியதுமான படிகச் சேர்மம். அணு உலையில் சீராக்கியாகவும் தேய்ப்புப் பொருளாகவும் பயன்படுவது. (வேதி)

boron nitride-பொரான் நைட்ரைடு: BN. வழுக்கும் வெண்ணிற பொருள். உயவிடு பொருளாகவும் மின்தடைப் பொருளாகவும் பயன்படுவது. (வேதி)

botany - தாவரவியல்:தாவரங்களை ஆராயுந்துறை. பூப்பன, பூவாதன என இரு பெரும் பிரிவுகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியது. தாவரங்களை ஆராய்பவர் தாவரவியலார். (பாட்டனிஸ்ட்). (உயி)