பக்கம்:அறிவியல் அகராதி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bre

59

Bro


மாற்றவல்லது. இதன் சிறப்பு இதுவே. (இய)

brewery - குடிம ஆலை: குடிமம் (சாராயம்) உற்பத்தி செய்யப்படும் இடம். (வேதி)

brewing - குடிமம் வடித்தல்: பீர், சாராயம் முதலியவை உற்பத்தி செய்யப்படுதல். (வேதி)

Bright's disease - பிரைட் நோய் சிறுநீரக அழற்சி. (உயி)

bristle - கூர்முள்: முள்ளம்பன்றி. (உயி)

Britannia metal - பிரிட்டானிய உலோகம்: வெள்ளி நிற உலோகக் கலவை. வெள்ளீயம், ஆண்டிமணி, செம்பு, காரீயம், துத்தநாகம் ஆகியவை சேர்ந்தது. மனையகப் பொருள்களிலும் குண்டுத்தாங்கிகளிலும் பயன்படுவது. (உயி)

bromide paper - புரோமைடு தாள்: ஒளிப்படத்தாள். ஒரு பக்கம் வெள்ளீயப் புரோமைடு பூசப்பட்டு உணர்பகுதிகளாக இருக்கும். மூலங்களில் இருந்து படங்களின் படி எடுக்கப் பயன்படுவது. (வேதி)

bromine - புரோமின்: Br. நீர்ம நிலையிலுள்ள ஒரே அலோகம். கருஞ் சிவப்பு நிறம், ஆவியாகக் கூடியது. குளோரினை ஒத்த மணம். நச்சுள்ள மாநிற ஆவி கொண்டது. நீரில் சீராகக் கரையும். சாராயத்தில் நன்கு கரையும். தொற்று நீக்கி, மற்றும் சாயங்கள் புரோமைடுகள் செய்யப் பயன்படுவது. (வேதி)

bronchile - மூச்சு நுண்குழாய்: நுரையீரலிலுள்ள சிறிய குழல், முச்சுக்குழலின் கிளை. பா. lung. (உயி)

bronchus - மூச்சுக்கிளைக் குழாய்: மூச்சுக்குழாயின் இரு கிளைகளில் ஒன்று. பா. lung. (உயி)

bronze - வெண்கலம்: செம்பும் துத்தநாகமும் வெள்ளீயமும் சேர்ந்த உலோகக் கலவை, சிலைகள், நாணயங்கள், சமையற் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

brood - அடையம்: 1. கால்வழி 2. அடைக்குஞ்சு. தோழியின் 8 வாரக் குஞ்சு வளர்ப்புக் கூண்டுகளில் கதகதப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவது. (உயி)

broth - கூழ்: தாவர அல்லது விலங்குப் பொருள்களிலிருந்து தயார் செய்யப்படும் சாறுணவு. (உயி)

brown earth - பழுப்பு மண்: மண்டலக்காடி. கரிமச்சத்து நிரம்பியது. இலையுதிர் காட்டிற்குரியது. (உயி)

brown sugar - பழுப்புச் சக்கரை: செம்பழுப் நிறமுள்ள தூய்மை செய்யப்படாத சர்க்கரை. போதைப் பொருள். (வேதி)

Brownian movement - பிரெளனியன் இயக்கம்: ஒரு பாய்மத்தில் சிறிய துகள்கள் விட்டு விட்டு இயங்குவதால் ஏற்படும் இயக்கம். அவ்வூடக மூலக்கூறுத் துகள்