பக்கம்:அறிவியல் அகராதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cal

64

cal


லது அய்டிராக்சைடுகளிலிருந்து நீர் வெளியேறும். கரிஈராக்சைடு கார்பனேட்டுகளிலிருந்து நீங்கும். இறுதியாகக் கிடைப்பது உலோக ஆக்சைடு. (வேதி)

calcinite - கால்சினேட்: பொட்டாசியம் அய்டிரஜன் கார்பனேட்டின் (KHCO3). கனிம வடிவம். (வேதி)

calcite - கால்சைட்: மிகப்பரவலாகவுள்ள கனிம வடிவங்களில் ஒன்று. படிகக் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டது. (வேதி)

calcium - சுதையம்: Ca, கடினமான வெள்ளி போன்ற பளபளப்பான உலோகம். கம்பியாக்கலாம், தகடாக்கலாம். சாக்கட்டி சுண்ணாம்புக்கட்டி முதலியவற்றிலுள்ளது. (வேதி)

calcium carbide - கால்சியம் கார்பைடு: CaC2. சாம்பல் நிறப் படிகம். சுண்ணாம்பையும் கல்கரியையும் மின் உலையில் 3000°செ. இல் வெப்பப்படுத்தக் கிடைக்கும். உரம்.(வேதி)

calcium cyanamide -கால்சியம் சயனமைடு: CaCN2. சாம்பல் நிறப் படிகம். நைட்ரஜன் சுழற்சியால் கால்சியம் கார்படை 1000° செ. இல் வெப்பப்படுத்தக் கிடைக்கும். உரம் - யூரியா. (வேதி)

calcium hydroxide - கால்சியம் அய்டிராக்சைடு: Ca(OH)2. நீற்றின கண்ணாம்பு. வெண்ணிறப் படிகம். கால்சியம் ஆக்சைடுடன் நீரைச் சேர்த்துப் பெறலாம். சிமெண்ட் தொழிலில் பயன்படுதல். (வேதி)

calcium oxide - கால்சியம் ஆக்சைடு: CaO. சுட்ட சுண்ணாம்பு. வெண்ணிறம், படிகமற்றது. சிமெண்ட் செய்யப்பயன்படுதல். (வேதி)

calcium phosphate - கால்சியம் பாஸ்பேட்: Ca3(PO4)2. வெண்ணிற வீழ்படிவு. கால்சியம் சூப்பர் பாஸ்பேட், பாசுவரிகக் காடி, பாசுவரம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுவது. (வேதி)

calculus - நுண்கணிதம்: சார்புகள் தொடர்பாகத் தொகையீடு செய்தல், வகைக் கெழுகாணல் ஆகியவை பற்றி ஆராயும் கணிதப் பிரிவு. வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் என இரு வகைப்படும். (கண)

calf muscle - கெண்டைக்கால் தசை: இஃது ஒர் இயக்குத் தசை. இத்தசை சுருங்கும்போது, குதிகால் தூக்கப்படுகிறது. காலடி நீட்டப்படுகிறது. நடத்தல், ஒடுதல், குதித்தல், நிற்றல் முதலிய இயக்கங்களுக்கு இது முதன்மையானது. (உயி)

californium - கலிபோர்னியம்: Cf, கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இதிலிருந்து பல ஓரிமங்கள் தொகுக்கப்படுகின்றன. கலிபோர்னியம் 252 அல்லணுக்களின் (நியூட்ரான்கள்) ஊற்றுவாய். (வேதி)

calomel - இரசகற்பூரம்: பாதரச (l) குளோரைடு, பூஞ்சைக் கொல்லி (வேதி)