பக்கம்:அறிவியல் அகராதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cal

65

cal


calorescence - வெப்ப ஒளிர்வு : ஒளிக்கதிர்களை ஒரு பரப்பு உறிஞ்சுதலும் வெப்பமானபின் அவை வெப்பக்கதிர் வீச்சாதலும் வெப்ப ஒளிர்வாகும். (இய)

Call - பேச்சு: தொலைபேசியில் பேசுதல் (தொ.நு.)

call, local -உள்ளூர்ப் பேச்சு. (தொ.நு.)

call, trunk -வெளியூர்ப் பேச்சு. (தொ.நு.)

call, STD - உறுப்பினர் நேரடி வெளியூர்ப் பேச்சு (இய)

callipers - கிடுக்கிமானி: கம்பிகளின் வெளிக் குறுக்களவையும் குழாயின் உள்குறுக்களவையும் காணப் பயன்படுங்கருவி. (இய)

callose - கேலோஸ்: தாவரச் சல்லடைத் தட்டுகளில் நிலையாகவோ, பருவத்திற்கேற்பவோ படியும் மாப்பொருள். இதனால் அத்தட்டுகள் செயலிழக்கும். (உயி)

Callus - 1. பட்டைவிடல்: தாவரக் குழாய்த் தொகுதி காயமுறும் பொழுது, அதற்குத் துலங்கலாக, வளர் திசுவில் வேறுபாடு அடையாத பஞ்சுக் கண்ணறைகள் தோன்றுதல். 2. காய்ப்பு: தோலில் கரடு தோன்றுதல் (உயி)

calorie - கலோரி: வெப்ப அலகு. 1. கிராம் நீரை 1 செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு சிறிய கலோரி. 1 கிலோ கிராம் நீரை 1 செ. க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவு பெரிய கலோரி. உடல் வெப்பம் கலோரிகளிலேயே அளக்கப்படுவது. 4.185 ஜூல்களுக்குச் சமமான ஆற்றலின் அலகு. (இய)

calorimeter - கலோரிமானி: உருவாகும் வெப்பத்தை அளக்கப் பயன்படும் கருவி (இய)

calorimetry - கலோரி அளவை: வெப்பத்தை அளக்கும் வேதி இயல் பிரிவு. (இய)

Calvin cycle - கால்வின் சுழற்சி:பென்சன் - கால்வின் - பாஷம் சுழற்சி. ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் இருட் செயல்வினைகள் இதில் அடங்கும். இறுதியாகக் கரி ஈராக்சைடு மாப் பொருளாகிறது. பசும்பாசியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு. பா. Blackman reaction, Hill reaction. (உயி)

calx - நீறு: உலோக ஆக்ஸைடு. அதிக வெப்ப நிலையில் காற்றில் ஒரு தாதுவை வெப்பப்படுத்தக் கிடைப்பது. (வேதி)

calyptra - மூடுபடை: பெண்ணியத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் சிதல் பயிரை மூடுவது. எ-டு. மாசிகள். (உயி)

calyptrogen - மூடுபடலம்: ஆக்குதிசுவடுக்கு. புற்களின் வேர் முனை ஆக்குதிசுவை மூடி இருக்கும். வேர் மூடியை உண்டாக்கும். (உயி)

calyx - புல்லி வட்டம்: ஒரு பூவின் முதலடுக்கு. பச்சை நிறமுள்ள

அ.அ 5