பக்கம்:அறிவியல் அகராதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cam

66

can


புல்லிகளாலானது. ஒளிச் சேர்க்கை நடத்துவது மட்டுமல்லாமல் பூவிற்குப் பாதுகாப்பும் அளிப்பது. (உயி)

cambium - அடுக்கியம்: அடுக்குத் திசுவான வளர்திசு. தாவரங்களில் பக்க வளர்ச்சிக்குக் காரணமானது. தண்டிலும் வேரிலும் உள்ளது. பா.vascular bundle. (உயி)

Cambrian -கேம்பிரியன் ஊழி: தொல்லூழியின் தொடக்கப் புவிவளரியல் காலம். 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 மில்லியன் ஆண்டுக்காலம் வரை நிலவியது. இக்காலத் தொல்லுயிர்ப் படிவங்கள் கடல் உயிர்களாலானவை. (உயி)

camera - புகைப்படப் பெட்டி: நிழற்படங்கள் எடுக்க உதவும் பெட்டி. (இய)

camouflage - நிற மாறாட்டம்: பா. warning colouration. (உயி)

camphor - சூடம்: C10H16O. வெண்ணிறப்படிகம். தனக்கே உரிய மணம், ஊக்கி, வயிற்று உப்புசம் நீக்கவும் செல்லுலாய்டு செய்யவும் பயன்படுவது. (வேதி)

Canada balsam - கனடா பால்சம்: மஞ்சள் நிறப்பாய்மம். நுண்ணோக்கியிலும், கண்ணாடி வில்லைகளை நிலைநிறுத்தவும் ஒளிக்கருவிகளுக்கு ஒட்டு பொருளாகவும் பயன்படுவது. (உயி)

cancer - புற்று நோய்: இயல்பு மீறிய உயிரணு வளர்ச்சியால் உண்டாகும் நோய். புற்றுநோய் உயிரணுக்கள் மிக விரைவாக வளரக்கூடியவை. முழுதும் குணமாக்கும் மருத்துவம் இன்னும் கண்டறியப்படவில்லை. (உயி)

candela - கேண்டலா: Cd. ஒளிச்செறிவின் எஸ்ஐ அலகு (இய)

candidate - தேர்வர், தேர்வுப்பொருள் (ப.து)

candle - மெழுகுவத்தி: கொழுப்புக் காடிகளிலிருந்து தயாரிக்கப்படுவது. (வேதி)

candle flame - மெழுகுவர்த்தி சுடர்.

candle power - வத்தித் திறன்: ஒளிச் செறிவின் முந்தைய அலகு. அனைத்துலக வத்தியின் அடிப்படையில் அளக்கப்பட்டது. 1940இல் உருவானது. (இய)

cane sugar - கரும்புச்சர்க்கரை: சுக்ரோஸ் (உயி)

cannie tooth - கோரைப்பல்: நாயிடத்துக் கோரைப்பல் நன்கு வளர்ந்துள்ளது. பாம்பிடத்து இது நச்சுப்பல். யானையினிடத்து தந்தம். பா. eye tooth. (உயி)

cannibal - தன்னின உண்ணி: தன்னின உயிர்களைத் தானே உண்ணும் உயிரி. அரசநாகம் சிறிய பாம்புகளை இரையாக உண்ணும். (உயி)

cannizzaro reaction - கன்னிசாரோ வினை: பென்சால்டிகைடை ஒரு கார அடர்கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சைல் ஆல்க