பக்கம்:அறிவியல் அகராதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cap

67

chi


காலாகவும் பென்சாயிகக் காடியாகவும் அது மாறும். (வேதி)

capacitance - மின் ஏற்புத்திறன்: C. மின் தேக்கு திறன். காப்புகள், கடத்திகள் ஆகியவற்றின் மின்னேற்றத்தேக்கு திறன். (இய)

capacitor - மின் ஏற்பி: மின் தேக்கி. பா. condenser (இய)

capillarity - நுண்புழைக்கவர்ச்சி: நுண்புழைத்திறன். புவிஈர்ப்புவிசைக்கு எதிராக நீர்மங்கள் தாமாகவே ஒடுங்கிய திறப்புகளில் உயரும் நிகழ்ச்சி. இம்முறையில் நீர்மங்கள் உயர்வது அவற்றின் அடர்த்தியையும் நுண்புழைத் திறனையும் பொறுத்தது. நிலத்தடி நீர் இத்திறனாலேயே மேலே உயர்கிறது. இந்நீரை அதிகம் உறிஞ்சித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்பவை. (உயி)

capillary tube - நுண்புழைக்குழாய்: நுண்புழைக் கவர்ச்சியுள்ள குழல். (இய)

capillary water - நுண்புழை நீர்: நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர். பயன்கள். 1. தாவரத்தண்டு வழியாக ஊட்ட நீர் தாவரத்தின் மற்றப் பகுதிக்குச் செல்லுதல். 2. இந்நெறிமுறையில் தானே மைநிரப்பும் ஊறி, மைஉறிஞ்சித் தாள், பூத்துணித் துண்டுகள் எல்லாம் வேலை செய்கின்றன. (உயி)

capitulum - தலைக்கொத்து: இப்பூக்கொத்தின் அடிக்காம்பின் தட்டு முனையில் பல காம்பிலாப்பூக்கள் இருக்கும். இவற்றையடுத்து மலட்டுச் செதில் வளையம் இருக்கும். எ-டு. சூரிய காந்தி. பா. inflorescence. (உயி)

capsule - பொதிகை: பெட்டகம். 1. ஒரு பிளவுறுகனி-வெண்டை 2. குச்சியத்தால் கண்ணறைப் படலத்தைச் சுற்றியுள்ள படலம். 3. மாசியின் கருப்பயிர் தலைமுறையின் சிதல்களில் காணப்படும் பகுதி. 4. ஒர் உறுப்பு அல்லது பகுதியில் குழ்ந்துள்ள பாதுகாப்புறை. (உயி)

capture - பிடிப்பு: ஒரு துகளை மற்றொரு துகள் கவரல். எ-டு. நேர் அயனி மின்னணுவைக் கவர்ந்து அல்லணுவை உண்டாக்குதல். சில அணுக்கரு வினைகளில் ஒர் அணுக்கரு அல்லணுவைக் கவர்வதால் காமாகதிர் ஒளி உமிழ்வு ஏற்படும். (இய)

carapace - புற ஓடு: ஆமை, நண்டு ஆகியவற்றின் உடலில் மூடியிருக்கும் கடினப் புறஎலும்புக் கூடு. (உயி)

carat - கேரட்டு: பொன்னின் தூய்மையளவையும், வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட்டு பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் பொன்னும் எஞ்சிய 10 பகுதிகள் செம்பு என்பதும் பொருளாகும். 0.200 கிராமுக்கு இணையான