பக்கம்:அறிவியல் அகராதி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

car

70

cas


carp - கார்ப்பு மீன்: நன்னீர் மீன். குளங்குட்டைகளில் காணப்படும் உணவு மீன். (உயி)

carpal bone - மணிக்கட்டு எலும்பு: இருவகைகளில் எட்டாக ஒவ்வொரு வரிசையிலும் நான்கு அமைந்திருக்கும். (உயி)

carpet - சூல் இலை: பூக்குத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு. சூல்பை, சூல் தண்டு, சூல்முடி ஆகியவற்றைக் கொண்டது. இவ்விலைகள் தனித்தும் சேர்ந்தும் இருக்கும். (உயி)

carpus - மணிக்கட்டு: மணிக்கட்டு எலும்புகளின் திரட்சி. (உயி)

carrier - மரபணுச் சுமப்பி: ஒடுங்கு மரபணுவைச் சுமந்து செல்லும் உயிரி. எ-டு. நிறக்குருடைக் கொண்டு செல்லுதல் (உயி) 2. மின்னேற்றச் சுமப்பி: முன்னணு அல்லது நேர்மின்னேற்றத் துளை. 3. ஊர்தி: ஊர்தி அலை. (இய)

carrier gas - சுமப்பு வளி: வளி நிறவரைவியலில் பயன்படுவது.

carrier wave - ஊர்தி அலை: மின்காந்த அலை. வழக்கமாக, நீள் வானொலி அலை. அதிர்வெண் எல்லையையோ ரேடார் அதிர்வெண் எல்லையையோ கொண்டது. செய்தியைச் சுமந்து செல்வது. பண்பேற்றம் வாயிலாகச் செய்தி சேர்க்கப்படுகிறது. (இய)

Cartesian coordinates - கார்ட்டீஷியன் ஆயத் தொலைகள்: பகுப்பு வடிவக் கணிதத்தில் பயன்படுத் தொகுதி. (கண)

cartilage - குருத்தெலும்பு: செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்கவல்லது. முக்கு, செவிமடல், முள் எலும்புத் தட்டுகள், எலும்பு முனைகள், மூட்டுகள் ஆகியவற்றில் குருத்தெலும்பு அமைந்து நெகிழ்ச்சி அளிப்பது.

cartilage culture - குருத்தெலும்பு வளர்ப்பு: நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்துள்ளனர். (1994) (மரு)

cartography - படவரைவியல்: படங்களை உருவாக்கும் துறை. (தொ.நு)

caruncle - விதைமுண்டு: (உயி)

caryopsis - மணிக்கனி: உலர் வெடியாக் கனி. விதையுறையுடன் சூல்பைச் சுவர் சேர்ந்திருக்கும் நெல். (உயி)

cascade process - அருவிமுறை: பலநிலைகளில் நடைபெறும் முறை. எ-டு: யுரேனியத்தை வளமாக்கும் விரவல் முறை. (வேதி)

case hardening - உறைக்கடினமாக்கம்: எஃகின் மேற்பரப்புக் கடினத்தன்மையை உயர்த்தும் முறை. இம்முறை பல்லிணை (கியர்) கிறங்கு தண்டுகள்