பக்கம்:அறிவியல் அகராதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cau

73

cell


caudate - வால்நுனி: இலையின் முனை மெலிந்து நீண்ட வாலாதல். (உயி)

caudex - அடிமரம்: 1. பனை அல்லது பெரணியின் நடுப்பகுதி. 2. சில பருவப் பயிர்களின் அடி நிலையாகப் பருத்திருத்தல். (உயி)

cauliflory - தண்டுபூக்கள் உண்டாதல்: இது முதியதும் தடித்ததும் இலையற்றதுமான கிளைகளில் உண்டாதல். எ-டு. கோகோ. (உயி)

caustic alkali - எரிகாரம்: சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு. (வேதி)

caustic potash - எரி பொட்டாஷ்: பொட்டாஷியம் அய்டிராக்சைடு. (வேதி)

caustic soda - எரிசோடா: சோடியம் அய்டிராக்சைடு. (வேதி)

cavitation - குழியாதல்: உயர்நேர் விரைவினால் அழுத்தங் குறைவதால் ஒடும் நீர்மத்தில் ஆவி நிறைந்த குழிகள் உண்டாதல். நீர்மத்தில் குழிகள் தோன்றுதல். (இய)

celestial equator - விண் நடுக்கோடு: விண்கோளப் பெருவட்டம். விண்கோளத்தை இது வட, தென் கோளங்களாகப் பிரிப்பது. (வானி)

celestial mechanics - விண் விசை இயல்: விண்பொருள்களுக்கிடையே உள்ள விசைகள், இயக்கங்கள் ஆகியவற்றை ஆராயுத்துறை. நியூட்டன் இயக்க விதி, ஈர்ப்பு விதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ஏவிய பின் செயற்கை விண் பொருள்களையும் ஆராய்வது. (வானி)

celestial sphere - விண் கோளம்: முடிவிலா ஆரமுள்ள கற்பனைக் கோளம். இதில் விண்பொருள்கள் அடங்கியுள்ளன. (வானி)

celestine - ஸ்ட்ரான்ஷியம் சல்பேட்டின் கனிம வடிவம். (வேதி)

cell - உயிரணு, கண்ணறை: உயிரியின் அடிப்படை அமைப்பலகும் வேலையலகுமாகும். உயிரணுவின் மரபணுக்களில் டி.என்.ஏ, ஆர்என்ஏ என்னும் விந்தை வேதிப்பொருள்கள் உள்ளன. இவற்றில் முன்னது மரபுப் பண்பை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்வது. புரதச் சேர்க்கையைக் கட்டுப்படுத்துவது. பின்னது முன்னதிற்கு அதன் பல வேலைகளிலும் துணைபுரிவது. முன்னது இல்லையேல் பின்னதும் இல்லை. கண்ணறை என்பது மிகப் பொருத்தமான சொல். (உயி)

cell - மின்கலம்: நேர் மின்னோட்டத்தை அளிக்கும் கருவி. முதன் முதலில் அமைக்கப்பட்டது ஓல்ட்டா மின்கலம். இதில் முனைப்படுதல், உள்ளிட நிகழ்ச்சி ஆகிய இரு குறைகள் உள்ளன. இவை நீங்கிய மின்கலம் முதல் மின்கலமாகும். இது தானியல்