பக்கம்:அறிவியல் அகராதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cell

74

cem


மின்கலம், பைக்ரோமேட் மின்கலம், லெக்லாஞ்சி மின்கலம், பசை மின்கலம் என ஐந்து வகைப்படும்.

cell body, perikaryon - கண்ணறைப் பொருள்: உட்கருவுள்ள நரம்பணுவின் பகுதி. இதன் விரிவுகளே அச்சியன்களும் கிளையன்களும். பா. neuron. (உயி)

celldivision - கண்ணறைப் பிரிவு: இது முதன்மையாக இரு வகைப்படும். 1. இழைப்பிரிவு (மிட்டாசிஸ்) 2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்). ஏனைய இரு வகைகள் 1. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்) 2. கட்டவிழ் உட்கருப்பிரிவு (ஃபிரீ நியூக் கிளியர் டிவிஷன்).

cell inclusions - கண்ணறைச் சேர்வுகள்: இவை கண்ணறைச் சாற்றிலுள்ள கரிம, கனிம வகைப் பொருள்கள். கரைசல்களாகவோ திண்மத் துகள்களாகவோ இருக்கும். (உயி)

cell membrane, plasma membrane, plasma lemma - கண்ணறைப் படலம், கணிமப் படலம்: கண்ணறையின் வெளிப்புற எல்லையான ஒரு வழி ஊடுருவு படலம். புரதத்ததாலும் கொழுப்பாலும் ஆனது. பொருள்கள் உள் வருவதையும் வெளிச் செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைச் சுவராக்கத்தில் சிறந்த பங்கு பெறுவது. (உயி)

cell theories - கண்ணறைக் கொள்கைகள்: 1. உயிரிகளின் அமைப்பலகும், வேலையலகும் உயிரணு. 2. அனைத்து உயிரணுக்களும் முன்னரே தோன்றிய கண்ணறைகளிலிருந்தே உண்டாகின்றன. (உயி)

cell wall- கண்ணறைச் சுவர்: பா. cell. (உயி)

cellular phone - கைத் தொலைபேசி: பா. pager.

cellophane - கண்ணாடித்தாள் காடியுடன் செல்லுலோஸ் சாந்தேட்டுக் கரைசலைச் சேர்க்க, இத்தாள் கிடைக்கும். பொருள்கள் மீது சுற்றப்பயன்படுதல். (வேதி)

celluloid - செல்லுலாய்டு: சூடத்திலிருந்தும் செல்லுலோஸ் நைட்ரேட்டிலிருந்தும் செய்யப்படும் வெப்பப் பிளாஸ்டிக் பொருள். (வேதி)

cellulose - மாவியம்: பன்மச் சர்க்கரைடு எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம். (உயி)

cement - படிகாரை: இது ஒரு கட்டுமானப் பொருள். 1824இல் ஆங்கில நாட்டைச் சார்ந்த கொத்தனார் ஜோசப் ஆஸ்பிடின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காரை கால்சியம் சிலிகேட்டு, கால்சியம் அலுமினேட் ஆகியவற்றின் கலவை. இதில் சிறிது ஜிப்சமும் உண்டு. இது பல வகைப்படும். (வேதி)