பக்கம்:அறிவியல் அகராதி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cen

76

cer


centriole, centrosome - மையப்புரி: உட்கருப்படலத்திற்கு வெளியே செயல் ஒடுங்கிய கண்ணறைகளில் காணப்படும் நுண்ணிய உருளை வடிவப் பொருள்.

centripetal force - மையநோக்கு விசை: வட்டப் பரிதி வழிச் செல்லும் துகள்மீது வட்ட மையத்தை நோக்கிச் செயற்படும் விசை. கயிற்றில் கட்டப்பட்ட கல் சுழற்சியில் கயிற்றில் உருவாகும் விசை மைய நோக்கு விசை. இது வட்ட இயக்கத்தைச் சார்ந்தது. பா. centifugal force. (இய)

centroid - திணிவு மையம்: ஒரே சீரான அடர்த்தியுள்ள ஒரு பொருளின் மேற்பரப்பில் ஈர்ப்பு மையம்.

centromere, kinomere, spindle attachment - மையப்படி, இயக்கப்படி, கதிர் இணைப்பு: நிறப்புரியின் பகுதி. இழைப் பிரிவிலும் குன்றல் பிரிவிலும் கதிரிழை இதில் இணைந்திருக்கும். (உயி)

centrum - நடுவகம்: ஒரு முள்எலும்பின் எடை தாங்கும் மையப்பகுதி பிடர் எலும்பிலும், பிடர் அச்சிலும் இல்லை. (உயி)

cephalothorax - தலைமார்பு: நண்டிலுள்ளது போன்று தலையும் மார்பும் இணைந்திருப்பது (உயி)

ceramic engine - வனைபொருள் எந்திரம்: புதிய தொழில் நுட்பம்.

ceramic fibre - வனைபொருள் நார்: புதிய தொழில்நுட்பம்.

ceramics - வனைபொருள்கள்: அதிக உருகுநிலையிலுள்ள கனிமங்கள், பயனுள்ளவை மட்பாண்டம். பீங்கான். (வேதி)

cercaria - முதிரிலி: முதிரா உயிரி. ஒட்டுண்ணிகளான தட்டைப்புழுக்களில் இம்முதிரா உயிரிநிலை உள்ளது. (உயி)

cerci - வாலுறுப்புகள்: பூச்சிகள், கணுக்காலிகள் ஆகியவற்றின் வயிற்றின் பின் முனையிலுள்ள ஓரிணைப் படல உறுப்புகள். (உயி)

cerebellum - சிறுமூளை: பின்மூளையின் பெரும்பகுதி இது. இரு அரைத்திரளைகளாகப் பிரிந்துள்ளது. இத்திரளைகளில் மேலும் பல பகுதிகள் உள்ளன. வேலைகள் 1. இயக்குத் தசைகளுக்கிடையே ஒத்துழைப்பை உண்டாக்கி நடத்தல், ஓடுதல் முதலிய இயக்கு வேலைகள் நடைபெற மூளைக்கு உதவுதல் 2. உடலின் நேர்த்தோற்றத்திற்கும் நிலைப்புக்கும் இதுவே காரணம். ஒ. cerebrum.

cerebral cortex, pallium - பெருமூளைப் புறணி, மூடகம்: பெருமூளையின் பகுதி விருப்பத்திற்குட்பட்ட இயக்கங்களையும் பார்வை, கேட்டல், தொடுதல் முதலிய உறுத்துணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது. பா. cerebrum. (உயி)