பக்கம்:அறிவியல் அகராதி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cer

77

cha


cerebro-spinal fluid, CSF - பெருமூளைத் தண்டு வடப் பாய்மம்: கொழுநீரை அமைப்பில் ஒத்தது. மைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பாற்றுவது. (உயி)

cerebrum - பெருமூளை: இது மூளையின் சிறந்த பகுதி இட அரைத்திரளை, வட அரைத்திரளை என இரண்டாகப் பிரிந்துள்ளது. இத்திரளைகளில் பல பகுதிகள் உண்டு. வேலைகள் 1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துகிறது. 2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துகிறது. 3. அறிவுக் கூர்மைக்கும் நினைவாற்றலுக்கும் காரணம். (உயி)

ceresin - வெண்மெழுகு கடினமானது. நொறுங்கக் கூடியது. தேன்மெழுகிற்கு மாற்றாக வண்ணங்களிலும் மெழுகுகளிலும் பயன்படுவது. (வேதி)

Cerium - செரியம்: Ce. கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

cerumen - செவிமெழுகு: காதுக் குரும்பை. புறச் செவிக்குழல் மெழுகுச் சுரப்பிகள் இதனைச் சுரப்பவை. செவிக்குள் புழுதி நுழைவதைத் தடுப்பது. (உயி)

cerussite - செருசைட்: காரீயத்தாது. (வேதி)

cervical vertebrae - கழுத்து முன் எலும்புகள்: தலையைத் தாங்குபவை. பா. Vertebral column

cervix - கழுத்து: 1. பாலூட்டிகளில் கருப்பைக்கும் பிறப்புவழிக்கும் இடையே உள்ள பகுதி. 2. மார்பையும் தலையையும் இணைப்பது. (உயி)

cgs system - செ.மீ. கி.வி. முறை: செண்டிமீட்டர், கிராம். வினாடி ஆகியவைகளை அடிப்படை அலகுகளாகக் கொண்ட முறை. தற்பொழுது நடைமுறையில் இல்லாதது. (இய)

chaeta - முள் மயிர்கள்: மண் புழுக்களில் உள்ளவை. கைட்டினாலானவை. (உயி)

chain - தொடர்: ஒரு மூலக்கூறில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்றுடன் மற்றொன்று பிணைப்புகள் உண்டாக்கும் பொழுது ஏற்படும் தொடர். (வேதி)

chain reaction - தொடர்வினை: யுரேனியம் 235 என்னும் கதிரியக்கத் தனிமம் தொடர்ந்து சிதைதல். இச்சிதைவுக்கு அல்லணுக்கள் குண்டுகளாகப் பயன்படுதல். இதனால் கிடைப்பது அளப்பரிய ஆற்றல். (இய)

chalaza - சூலடி விதையிலைத் தாவரச் சூலில் பரு திசுவும் (நியூசெல்யலஸ்) மேலுறைகளும் (இண்டகுமெண்ட்ஸ்) சேருமிடம். (தாவ) 2. சூல்நாண் பறவை முட்டையின் மஞ்சள்