பக்கம்:அறிவியல் அகராதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cho

83

chr


பெறப்படுவது. வெண்ணிற மெழுகுப் பொருள். மனிதத் திசுக்களில் காணப்படுவது. பல உயிர்ப்புச் செயல்களுக்குக் காரணி. ஆனால், இது உடலில் அதிகமானால் மாரடைப்பு ஏற்படும். இதற்குரிய துணுக்கச் சொல் இதயத்தமனிக் குழாய் அடைப்பு. (கரோனரி துரோம்போசிஸ்). (உயி)

chordata - தண்டு அல்லது நாண் உடையன: உயர்வகை விலங்குகள். 7,000 வகைகள். இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுத் தண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்புவடம் ஆகிய மூன்று சிறப்புறுப்புகள் காணப்படும். நரம்புவடம் முதுகுப்புறம் அமைந்த குழாய் ஆகும். துணைப் பிரிவுகளும் உண்டு. எ-டு. ஆம்பியாக்சஸ். (உயி)

chorion - பிரிபடலம்: மூன்று கருப்படலங்களில் ஒன்று. (உயி)

choroid - விழியடிக் கரும்படலம்: கண் நடுவடுக்கு. விழிவெண் படலத்திற்கும் விழித்திரைக்கும் இடையிலுள்ளது. பா. கண். (உயி)

choroid plexus - மூளையின் அடிப்பின்னல்: மூளையிலுள்ள அதிகம் மடிந்த குழாய்ப் பகுதி. (உயி)

chromatid - நிறணியன்: கண்ணறைப் பிரிவின் தொடக்க நிலைகளில் நிறப்புரியிலிருந்து தோன்றும் இழை போன்ற பொருள். (உயி)

chromatography - நிறவரைவியல்: பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் முறை. பல கூட்டுப் பொருள்களைத் தேர்வு உட்கவரல் முறையில் பிரித்து, அவற்றை இனங்காணல். இது தாள் நிறவரைவியல், மென்படல நிறவரைவியல், வளி நீர்ம வரைவியல் எனப் பல வகைப்படும். (வேதி)

chromatophore - நிறத்தாங்கி: பச்சோந்தி முதலிய முதுகெலும்பிகளின் தோலில் காணப் படும் நிறமியுள்ள உயிரணு. (உயி)

chromatin - நிறமியன்: உட்கருப் புரதம். நிறப்புரியின் பகுதி. இழைவலைப் பின்னலாலானது. நல்நிறமியன், வேற்றக நிறமியன் என இருவகையுண்டு. (உயி)

chromatopsia - நிறப்பார்வை: இது ஒரு பார்வைக் குறைபாடு. நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போன்று தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா. (உயி)

chromic acid - குரோமிகக் காடி: மூவிணை திறனுள்ள குரோமியம். கிச்சிலி சிவப்பு நிறம் வெளுக்கவும் சாயம் ஏற்றவும் பயன்படுவது. (வேதி)

chromite - குரோமைட்: Fe.Cr2O4. குரோமியத் தாது (வேதி)

chromium - குரோமியம்: Cr. நீலமும் வெள்ளையும் கலந்த கடின உலோகம், காற்றில் சிதையாதது. தட்டுகளுக்கு