பக்கம்:அறிவியல் அகராதி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cle

87

cli


கள். இன்று மனித முயற்சிகளைக் குறைக்கச் சலவை எந்திரங்கள் சந்தைக்கு வந்துள்ளன. (இய)

clean programming - நிறை நிகழ்நிரலாக்கல்: கணிப்பொறி சார்ந்தது. (தொ.நு)

cleansing agents - துப்புரவாக்கிகள்: சவர்க்காரம், பெட்ரோல், ஆக்சாலிகக் காடி முதலியவை. துப்புரவாக்குவதில், கறைநீக்கமும் அடங்கும். மசகை பெட்ரோல் மூலமும் எண்ணெய் வண்ணக் குழைவைக் கற்பூரத் தைலம் மூலமும், மையை ஆக்சாலிகக் காடி மூலமும் போக்கலாம். (வேதி)

clearing - தெளிவாக்கல்: நிலையான நுண்ணோக்கிப் படவில்லைகள் தயாரிப்பதில் நீர்நீக் கலுக்கும் பதிய வைத்தலுக்கும் இடையிலுள்ள நிலை. இதன் நோக்கம் நீர்நீக்கு பொருளை அகற்றி, அதனைப் பதிய வைக்கும் பொருளோடு கலக்கக் கூடிய பொருளால் மாற்றீடு செய்தலே ஆகும். இச்செயல் திசுக்களை ஒளி ஊடுருவுமாறு செய்யும், தெளிவாக்கு பொருள்களாவன, பென்சீன், சைலீன். (உயி)

cleavage - 1. பிளவு: மென்பரப்புகளை உண்டாக்க அணுத்தளங்களில் படிகத்தைப் பிளத்தல். (இய) 2. பிளவிப் பெருகல்: கருவுற்ற முட்டை இழைப் பிரிவுகளால் பிளவுறுதல். அதில் சம எண்ணிக்கை உட்கருவுள்ள சிறிய கண்ணறைகள் உண்டாகும். (உயி)

cleistogamy - மூடுதோற்றம் : தெளிவாகக் கண்ணுக்குத் தெரியாத சிறு பூக்கள் உண்டாதல். இவை திறப்பதில்லை. ஆகவே, தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல். (உயி)

climate - தட்பவெப்ப நிலை: வெப்பநிலை, ஈரநிலை முதலியவற்றைப் பொறுத்தவரை ஓரிடத்தின் அல்லது ஒரு நாட்டின் பருவநிலை. பா. weather. (இய)

climatic elements - தட்ப வெப்பநிலை மூலங்கள் இவை வெப்பம், காற்றுப்பதம், ஈரம் வடிதல், ஈரநிலை, காற்று முதலியவை ஆகும். (இய)

climatology - தட்பவெப்ப நிலை இயல்: தட்பவெப்ப நிலைகளை ஆராயுந்துறை. பா. meteorology. (இய)

cline - வடிவ வேறுபாடு: உயிர்களின் உருவ வேறுபாடு. (உயி)

clinic - மருத்துவ அகம்: தனியார் மருத்துவமனை (மரு) பா. hospital.

clinical genetics - மருத்துவ மரபணுவியல்: நோயாளியை நேரடியாக உற்றுநோக்கி, உயிரியில் மரபுரிமையை ஆராயுந்துறை. (மரு).

clinical pathology - மருத்துவ நோய்இயல்: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர் முதலியவற்றை ஆய்ந்து, நோய்க் குறிகளின்