பக்கம்:அறிவியல் அகராதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coa

89

coe


coal tar - நிலக்கரித்தார்: நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைப்பது. சாலை போடப் பயன்படுவது. (வேதி)

coaxial cable - மைய அச்சுக்கம்பி வடம்: காப்புறையால் சூழப்பட்ட மையக் கடத்தியைக் கொண்ட கம்பி வடம். இது மற்றொரு கடத்தியின் நில இணைப்பு உறையில் பொருந்தி இருக்கும். மையக் கடத்தியும், வெளிப்புறக் கடத்தியும் மைய அச்சு உடையவை. அதாவது, ஒரே அச்சு உடையவை. புறப் புலங்களை உண்டாக்காததால் அவை அதிக அதிர்வெண் குறிபாடுகளைச் செலுத்தப் பயன்படுபவை. (இய)

cobalt - கோபால்ட்: Co. வெண்ணிறமும் கடின மாறுநிலையுங் கொண்ட உலோகம். கம்பியாக்கலாம். தகடுமாக்கலாம். சிறிது காந்த ஆற்றலுமுண்டு. பல உலோகக் கலவைகளில் பயன்படுவது. தவிர மின்முலாம் பூசுவதிலும் உயர்விரைவு வெட்டுக் கருவிகளிலும் பயன்படுகிறது.

coccus - கோளியம்: கோளவடிவக் குச்சியம். கோளியங்கள் ஒற்றையாகவோ இரட்டையாகவோ தொடராகவோ இருக்கும். ஒழுங்குள்ள ஒழுங்கற்ற கொத்துகளாகவும் காணப்படும். (உயி)

coccyx - வால் எலும்பு: மனித முதுகெலும்பில் முக்கோண வடிவமுள்ள சிற்றெலும்பு. மூவககோள எலும்பிற்குக் கீழுள்ளது. (உயி) பா. vertebral column.

cochlea - காது நத்தை எலும்பு: பா. ear. (உயி)

cockroach - கரப்பான்: கணுக்காலி. (உயி)

cocoon - கூடு: பூச்சிக் கூட்டுப்புழுவிற்குப் பாதுகாப்புறை வண்ணத்துப் பூச்சி. (உயிர்)

cod - காட்: ஒருவகை உணவு மீன். இதன் ஈரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காட் கல்லீரல் எண்ணெய் ஆகும். சிறந்த மருத்துவச் சிறப்புடையது. வைட்டமின் டி பெறக் குழந்தைக்குக் கொடுக்கப்படுவது.

code - குறியம்: குறித்தொகுதி. குறிவடிவமுறை. செய்திகளைக் குறிப்பது. இச்செய்திகள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் குறி வடிவத்தில் செல்பவை. எ-டு. இரு குறியம், எந்திரக் குறியம், மோர்ஸ் குறியம். (இய)

codon - குறியன்: குறிப்பிட்ட அமினோகாடிக்குக் குறிமை செய்யும் நியூக்ளியோடைடு மூலங்களைக் கொண்ட ஒரு தொகுதி. (உயி)

coefficient - மாறிலி, நிலை எண், கெழு: வரையறுத்த நிலைமைகளில் குறிப்பிட்ட பொருளின் வரையறுபண்பின் அளவு. எ-டு. விரிவெண், வெப்ப எண். (இய)

coelenterata - குழிக்குடலிகள்: இருபடைப்படலக் கண்ணறை விலங்குகள். 1000 வகைகள். பை