பக்கம்:அறிவியல் அகராதி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

col

91

col


coleorhiza - விதை வேறுறை: புல்முளைக் கருவின் இளம் வேரை மூடிப்பாதுகாக்கும் உறை. (உயி)

collector - திரட்டி: படிகப் பெருக்கியின் ஒரு பகுதி. (இய)

collenchyma - உரத்திசு: உரவியம். தாவரத் திசுவில் ஒருவகை. (உயி)

colligative properties - தொகைசார் பண்புகள்: 1. ஆவி அழுத்தத்தைக் குறைத்தல் 2. கொதிநிலையை உயர்த்தல் 3. உறைநிலையைத் தாழ்த்தல் 4. ஊடுபரவழுத்தம். (வேதி)

collision - மோதல்: துகள்கள் ஒன்றை மற்றொன்று தாக்குதல். (இய)

collision density - மோதல் அடர்த்தி: ஓர் அல்லணுப் பாய்மம் பருப்பொருள் வழியாகச் செல்லும்பொழுது, ஒரலகு நேரத்தில் ஓரலகுப் பருமனில் தோன்றும் மோதல்களின் எண்ணிக்கை. (இய)

colocation – ஒத்தநிலைக் கொள்ளிடம்: ஒரு நுட்பம். புவிநிலைப்புச் சுற்றுவழியில் இடம் கிடைக்காத பொழுது இந்நுட்பம் மேற்கொள்ளப்படும. இன்சட் 2சி மற்றொரு நிலாவிற்கு நெருக்கமாகவும், ஒத்ததாகவும் நிலைகொள்ளுமாறு செய்யப்பட்ட முதல் நிலா. இதனால் இருநிலாக்களும் ஒரே பெரிய நிலா போன்று தெரியும். (வா. அறி)

colloid - கூழ்மம்: கரைசல் அல்லது தொங்கலிலுள்ள பொருள். இதன் துகள்கள் பெரியவையாக இருப்பதால், கரிமப்படலத்தின் வழியே அவை செல்லா. ஒ. gel, sol. (இய)

colloid gold - கூழ்மப்பொன்: கூழ்மத்தங்கம். (வேதி)

colon - பெருங்குடல்: குடல்பையிலிருந்து கழிகுடல் வரை விரிந்துள்ள பகுதி, ஏறுகுடல், குறுக்குக் குடல், இறங்குகுடல் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பா. alimentary canal. (உயி)

colony - 1. வாழிருப்பு: ஒரே வகைத் தனி உயிரிகள் நெருங்கி வாழும் தொகுதி. 2 கூட்டுயிரி: பல ஒரே வகை உயிரிகள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடன் வாழ்தல். (உயி)

colorimeter - நிறமானி: நிறங்களின் செறிவைப் பகுக்குங் கருவி. (இய)

color - நிறம்: பார்வைக் கதிர்வீச்சின் அலைநீளத் தொடர்பாகக் கண் - மூளை மண்டலத்தில் உண்டாக்கப்படும் உடலியல் உணர்ச்சி. மரபு நிலை வழியில் பார்க்க பார்வை நிறமாலை ஏழு நிறங்களாலானது. வேறுபட்ட அலைநீளங்களைக் கொண்ட ஒற்றை நிறக் கதிர்வீச்சுகளுக்குக் கலப்பு நிறங்கள் என்று பெயர். கலப்பு நிறத்தோடு வெண்ணொளியைச் சேர்க்க. அது நிறைவுறா நிறமாகும்.