பக்கம்:அறிவியல் அகராதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

col

92

com


அதற்குப் பெயர் சாயல் நிறம். வழக்கமான மூன்று முதன்மை நிறங்களாவன, பச்சை, சிவப்பு, நீலம். இவற்றைக் கலந்து எவ்வகை நிறத்தையும் பெறலாம். வெள்ளொளி என்பது பார்வைக் கதிர்வீச்சுகளின் இயல்புக் கலவையாகும். சிவப்பு நிறம் ஒரு பொருளால் மறிக்கப்படுவதால் அது சிவப்பாகத் தெரிகிறது. ஒரு பொருள் எல்லா நிறங்களையும் உறிஞ்சும்பொழுது கறுப்பாகவும் வெளிவிடும் பொழுது வெள்ளை யாகவும் தெரியும். இரு நிறங்களைச் சேர்த்து வெள்ளை உணர்ச்சியை உண்டாக்குவதற்கு நிரப்பு நிறங்கள் என்று பெயர். இவற்றை உண்டாக்கப் பல இணைநிறங்கள் உள்ளன. (இய)

colour blind - நிறக்குருடு: சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலை. குறிப்பாகச் சிவப்பு, பச்சை நிறங்களைப் பிரித்தறிய முடியாத நிலை. (உயி)

colour vision - நிறப்பார்வை: வேறுபட்ட நிறங்களைப் பிரித்தறியும் கண்ணின் திறன். விழித்திரையிலுள்ள மூவகைக் கூம்பணுக்கள் சிவப்பு, பச்சை, நீல ஒளிக்கேற்ற துலங்கலை உண்டாக்குகின்றன. பலவகை நிறக்குருடுகள் உண்டு. உண்மை நிறக்குருடு எந்நிறத்தையும் அறிய இயலாது. இவ்வாறிருப்பது அருமை. பொதுவாக, ஆண்களுக்குச் சிவப்பு, பச்சை, மாநிறம், வெளிறிய சாம்பல் நிறம் ஆகியவற்றைப் பிரித்தறிவதில் இடர் உண்டு. பா. colour blind. (இய)

columella - திசுமுகடு: 1. மாசி என்னும் பூக்காத் தாவரத்தின் நடுப்பகுதியில் காணப்படும் பகுதி செழுமையற்ற பகுதியைச் சுற்றிலும் சிதலை உண்டாக்குந் திசுவுள்ளது. 2. சுருள் சிப்பியின் மைய அச்சு. 3 முதுகெலும்பிலாக் கீழின விலங்குகளின் கேள்குழி. 4. கனி பிளவுறுதலில் சூல்இலைகள் பிரிந்த பின் மையத்தில் எஞ்சும் பகுதி. (உயி)

coma-1. ஆழ்மயக்கம் 2 குஞ்சம் 3. சூழுறை: வால்மீன் உட் கருவைச் சூழ்ந்துள்ள வளியும் புழுதியும் கொண்ட புகை முகில் 4. பிறழ்ச்சி வில்லை ஆடியின் திரிபு.

combinational chemistry - கூடுகை வேதிஇயல்: இது ஒரு துணுக்கம். மூலக்கூறுகள் வரம்பற்றுச் சேர்வதை அனுமதிப்பது. இதனோடு தொடர்புடையவை கூடுகை முறையும் கூடுகை நுணுக்கமும் ஆகும். (வேதி)

combinatorics - கூடுகைக்கணக்கு.

combustion - கனற்சி: எரிதல். உயிர்வளி ஏற்றத்தால் அல்லது அதை ஒத்த செயலினால் வெப்பம் அல்லது ஒளி உண்டாதல். இதன் அடிப் படையில் வெப்ப எந்திரங்கள் அமைக்கப்படுதல். இது இரு வகைப்படும். 1. புறக்கனற்சி