பக்கம்:அறிவியல் அகராதி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

94

com


செய்த ஊசல்: பா. pendulum. (இய)

competition - போட்டி: உணவு, நீர் முதலியவற்றிற்காக இரு உயிரிகளுக்கிடையே ஏற்படும் இடைவினை. இயற்கைத் தேர்வில் இது ஓர் இன்றியமையாக் காரணி. (உயி)

complex - 1. உளச்சிக்கல்: ஒர் உளக்குறைபாடு, உளப்பகுப்பில் நனவிலித் தோற்றம் எனக் குறிக்கப்பெறும். நனவாற்றலின் திசையையும் அமைப்பையும் உறுதி செய்வது. இச்சிக்கலை நோயாளியின் நனவிற்குக் கொண்டு வருவதே உளப்பண்டுவத்தின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். இது தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், ஒடிபஸ் சிக்கல் எனப்பல வகைப்படும். 2. அணைமம்: ஒருவகைக் கூட்டுப்பொருள். இதில் அயனிகள் அல்லது மூலக்கூறுகள் உலோக அணு அல்லது அயனியோடு சேர்ந்து ஈதல் பிணைப்பை உண்டாக்கும். பிணைப்புறும் வகைகளுக்கு ஈந்திகள் (லிகண்ட்ஸ்) என்று பெயர். பா. chelate. (வேதி) 3. கலவை: மருந்துக் கலவை. 4. தொகுதி: வைட்டமின் தொகுதி. (உயி)

complex number - சிக்கல் எண்: கற்பனை எண்ணோடு சேர்க்கப் படும் மெய்யெண். எ-டு. 5 + √-1, 3.5 x √-7 (கண)

component, constituent - இயைபுறுப்பு: பகுதிப் பொருள். ஒரு கலவையிலுள்ள தனிமவேதிப் பொருள்களில் ஒன்று. இக்கலவையில் வேதிவினை நிகழாது. எ-டு. நீர் பனிக்கட்டி சேர்ந்த கலவை ஓர் இயைபுறுப்பு கொண்டது. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த கலவை இரு இயைபுறுப்புகளைச் கொண்டது. (வேதி)

compost - தொழுஉரம்: குச்சிய வினையினால் தாவரப் பொருள் சிதைதல். இதனால் செழிப்பான மண் தாவரத்திற்குக் கிடைக்கும். (உயி)

compound - சேர்மம்: கூட்டுப் பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்த ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களைப் பொதுவான இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்குட்பட்டது. எ-டு. நீர், கரி ஈராக்சைடு. ஒ. கலவை. (வேதி)

compound eye - கூட்டுக்கண்: பூச்சிகளின் கண்கள் பலபார்வை அலகுகளாலானவை. ஒவ்வொரு அலகும் குவிந்து அல்லது அரைக்கோள நிலையில் இருப்பது எப்பொழுதும் புதைந்திருப்பது. எ-டு. நண்டு. (உயி)

compound lens - கூட்டு வில்லை: இரண்டிற்கு மேற்பட்ட குவி வில்லைகள் சேர்ந்திருப்பது. ஒன்று பெரிதான பிம்பத்தை உண்டாக்குவது. மற்றொன்று